உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் செலவழித்து விடுவார். அவர் திடீரென இறக்க நேரிட்டால், நீர் அல்லவா அரசாள்வீர்? அப்போது நீர் பணத்திற்கு என்ன செய்வீர்? உம் சகோதரருக்குப் புத்தி சொல்லும்,’ என்று கூறி வந்தார்கள்.

இளங்குமணன் தருமத்தின் பெருமையை அறியாத மூடனாகையால், தன் அண்ணன் மீது பகைமை கொண்டான்; குமணனைக் கொன்று விடவும் யோசனை செய்தான். இதனை அறிந்தான் குமணன். உடனே அவன் நள்ளிருளில், தன்னை ஒருவரும் அறியாதபடி காட்டிற்கு ஓடி விட்டான்.

தனக்குப் பயந்து தன் அண்ணன் எங்கேயோ ஓடி விட்டான் என்று இளையவன் களிப்படைந்தான்; தான் அந்நாட்டிற்கு அரசனானான். குடிகள் அவனை வெறுத்தார்கள். அவர்கள் குமணனை நேசித்து வந்தார்கள். குமணனை மீளவும் அழைத்து வந்து நாட்டை ஆளச் செய்ய வேண்டும் என்று அவர்கள் முயன்றார்கள்.

இளங்குமணன் தன் தமையனது தலையைக் கொண்டு வருவார்க்கு ஏராளமான பரிசு கொடுப்பதாகப் பறையறைவித்தான். ‘அந்தோ ! இஃது என்ன கொடுமை!’ என்று குடிகள் மனம் வருந்தினார்கள். சிலர் மூட

32