அரசனுக்குத் தெரியாமல் குமணனுக்கு உணவு கொடுத்து வந்தனர்.
ஒரு நாள் கவிவாணர் ஒருவர் குமணனைத் தேடிக் காட்டையடைந்து, அவனைக் கண்டார்; கண்டு, தம் வறுமையைத் தெரிவித்தார். குமணன் தன்னிடம் பொருள் ஒன்றும் இல்லாததை நினைந்து வருந்தினன்; பின்னர்ச் சிறிது நேரம் ஆலோசனை செய்து, ‘ஐய, என் தலையைக் கொண்டு வருவார்க்கு ஏராளமான பொருள் கொடுப்பதாக என் தம்பி வாக்களித்துள்ளான். ஆதலால், எனது தலையை அறுத்து எடுத்துச் செல்லும். ஏராளமான பொருள் பெறுவீர். அதனைக் கொண்டு உமது வறுமையைத் தீர்த்துக்கொள்ளும்,’ என்றான்.
வள்ளல் கூறிய மொழிகளைக் கேட்ட கவிவாணர் மனம் நொந்தார். அவர் அவனை வெட்டத் துணிவரோ! ஒரு போதும் துணியாரல்லவா? அவர் ஓர் உபாயம் செய்தார்; ஒரு செவ்வாழைக் கிழங்கை எடுத்துக் குமணன் தலை போலச் செய்தார்; சிறந்த சிற்பியால் அதற்கு வர்ணமிடுவித்தார்; பின்னர் அதனை எடுத்துக் கொண்டு இளங்குமணனிடம் சென்றார்.
தன் சகோதரன் தலையைக் கண்டான் இளங்குமணன். கண்டதும், அவனது உடம்பு
33