நடுங்கியது; கண்களிலிருந்து நீர் அருவி போலப் பாய்ந்தது. புலவர் கொண்டு வந்தது பொய்த் தலை என்பது விளங்கியதும், அவன் அப்புலவரை நோக்கி, ‘ஐய, என் அண்ணனை உயிருடன் நீர் கொண்டு வந்தால், உமக்கு இப்போது சொன்ன திரவியத்தை விட இரண்டத்தனை தருவேன்,’ என்று கூறினன்.
கவிவாணர் உடனே காட்டிற்கு ஓடினார். குமண வள்ளலிடம் நடந்ததை நவின்றார். குமணன் பெருங்களிப்படைந்தான். பாவலர் குமணனை அழைத்துச் சென்றார். இளங்குமணன் தன் அண்ணன் கால்களில் வீழ்ந்தான்; தான் செய்த மூடச் செயலுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்; அரசை அண்ணனுக்கே தந்தான். அன்று முதல் அவன் துட்டர்களோடு சேருவதை ஒழித்து விட்டான். அவன் தன் சகோதரனிடம் இருந்து கொண்டு, அவனது வேலைகளைப் பார்த்து வந்தான். பாவலர் பொருள் பெற்றுச் சென்றார்.
கேள்விகள்:
1. குமண வள்ளலின் குணம் என்ன?
2. இளங்குமணனுக்கு அவனுடைய நண்பர்கள் கூறி வந்தது என்ன?
3. குமண வள்ளல் ஏன் ஒருவரும் அறியாதபடி காட்டிற்கு ஓடினார்?
35