வண்டி ஒரு காட்டின் வழியே போய்க் கொண்டிருந்தது. திடீரென்று கள்வர் சிலர், அங்குத் தோன்றி, அந்த வண்டியை நிறுத்தினர். அவர்கள் பிரயாணிகளைப் பார்த்து, “உங்களிடத்தில் உள்ள பொருள்களைத் தந்து விடுங்கள். இன்றேல், உங்கள் அனைவரையும் சுட்டுக் கொன்று விடுவோம்!” என்று பயமுறுத்தினார்கள்.
திருடர்கள் பலரைச் சோதனை செய்தார்கள். அவர்கள் விரும்பிய பொருள் இல்லை. ஏனென்றால், பிரயாணிகளுள் பலர் ஏழைகள். அதனால், அக்கள்வர்களின் தலைவன் ஒரு தந்திரம் செய்தான். அவன் அந்த வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் எவ்விதத்திலும் நூறு வராகன் கொடுக்க வேண்டும். அல்லாவிடில், உங்கள் எல்லாரையும் சுட்டுக் கொன்று விடுவோம்!" என்றான்.
வண்டியின் உட்புறத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் மிக்க கலக்கத்துடனிருந்தார்; கள்வன் சொன்னதைக் கேட்டார். அவர், செருப்பில் நோட்டை வைத்திருந்த பெண்ணைக் கள்வனுக்குக் காட்டி, “இவள் செருப்பைப் பரிசோதித்தால், உங்களுக்கு வேண்டிய பொருள் கிடைக்கும்,” என்றார். உடனே கள்வர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டு அவள் செருப்பைப் பரிசோதித்தார்கள்; அதனுள்ளே இருந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் முந்நூறு வராகன் மதிப்புள்ள நோட்டுகளைக் கவர்ந்து சென்றார்கள்.
48