உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்வர்கள் போன பின், வண்டியில் இருந்த யாவரும் கிழவரைத் தூஷித்தனர்.பணத்தைப் பறி கொடுத்தவள் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. வண்டியும் குறித்த ஊரை அடைந்தது. எல்லாரும் இறங்கித் தத்தம் வீடுகளை அடைந்தனர். பணம் இழந்த மங்கை ஆறாத் துயருடன் தன் வீடு சென்றாள். பெரியவா் எல்லாருக்கும் முன்பு இறங்கித் தமது வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தார்.

பணம் இழந்த பெண், தனது மாளிகையில் அதிக துக்கத்துடன் வீற்றிருந்தாள். அப்போது தபாற்காரன், அவளுக்கு யாரோ பணம் அனுப்பி இருப்பதாகச் சொன்னான். அவள் அதிசயங் கொண்டாள்; தனக்குப் பணம் அனுப்பக் கூடியவர் யாரும் இல்லையே என்றெண்ணினாள். அறுநூறு வராகன் அவளுக்கு வந்திருந்தது. அதனுடன் ஒரு கடிதமும் வந்தது. அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது: “அம்மா, நான் நீ வந்த வண்டியில் உட்கார்ந்திருந்த கிழவன். உன்னைக் கள்வரிடம் காட்டிக் கொடுத்தவன் நானே. நான் அயல்நாடு சென்று, பதினாயிரம் வராகன் சம்பாதித்துக் கொண்டு, நீ வந்த வண்டியில் வந்தேன். கள்வர்கள் என்னைப் பரிசோதித்திருந்தால், என் பொருள் முழுவதையும் எடுத்துப் போயிருப்பார்கள். உன்னிடம் இருந்தது முந்நூறு வராகன். அவ்வளவோடு அக்கள்வர் தொலைந்தால் போதும் என்று நான் எண்ணினேன். அதனாலேதான், உன்னை அவர்களிடம்

50