உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் சோழரின் அருஞ்செல்வியாராகிய மங்கையர்க்கரசியாரை மணம் புரிந்து கொண்டார். சோழர் குலப் பெண்மணி சைவ மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் கணவரோ, சமண மதத்தைச் சேர்ந்தவர். எனினும், தாம் எவ்விதத்திலும் கணவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார் அரசியார். சோழ அரசர், தம் மகளாருடன் குலச்சிறையார் என்னும் தம் அமைச்சரையும் மதுரைக்கு அனுப்பினர்.

மங்கையர்க்கரசியார், ‘குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்,’ என்றபடி, பாண்டிய மன்னர் மனம் போல நடந்து வந்தார்; அவரே தமக்குக் கடவுள் என்றும் எண்ணினார். என்றாலும், அரசர், சமண மதத்தில் சேர்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவர் ஓர் அந்தணர் மூலமாகச் சீர்காழிப் பதியில் இருந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு வந்து சைவத்தை நிலைநாட்டுமாறு வேண்டினர்.

அவ்வாறே, திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களோடு மதுரைக்கு வந்து, சோமசுந்தரக் கடவுள் ஆலயத்தைத் தரிசித்து, அருகிலே இருந்த மடம் ஒன்றில் தங்கினர். அவர் வந்து தங்கியதைக் கண்ட சமணர் பயந்தனர்; அவர் தமது மதத்தைப் பொய்ப்பித்து விடுவரோ என்று ஏங்கினர்; அரசரைச் சைவராக்கி விடுவரோ என்றும் சந்தேகித்தனர். பின்பு அச்சமணர் அரசரிடம் சென்று, 'அரசே, சைவத்-

59