உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தைத் தழுவுபவன் ஒருவன் இங்கு வந்துளன்; அவன் ஒரு மடத்தில் தங்கியிருக்கிறான். நமது மதத்தைக் கெடுக்க வந்தான் போலும்! அவன் தங்கியுள்ள மடத்தில் நெருப்பை வைத்து விடுவோம்,’ என்றனர். அரசரும் அதற்கு உடன்பட்டனர். உடனே அச்சமணர் அவ்வாறே செய்தனர்.

திருஞானசம்பந்தர், தம் மடத்தில் தீப்பற்றியதைக் கண்டார்; சிவபெருமானைக் குறித்து ஒரு பதிகம் பாடினார். உடனே அந்நெருப்பு அம்மடத்தை விட்டு விலகி, அரசரை வெப்பு நோயாகப் பற்றியது. நோயின் துன்பம் பொறுக்க மாட்டாமல் அரசர் அலறினார். மங்கையர்க்கரசியாரும் பெரிதும் வருந்தினர். அரசர்க்குண்டான வெப்பு நோயைத் தீர்க்கப் பல வைத்திய நிபுணர் சென்றனர். ஒருவராலும் சுகமாக்க முடியவில்லை. பிறகு சமணர் தம் மந்திரங்களைச் செபித்தனர். அதனாலும், பயன் பட வில்லை. சமணர் நிலை கலங்கினர். அரசர் பட்ட துன்பம் சொல்லுதற்கு இயலாதது.

மங்கையர்க்கரசியார், ‘சம்பந்தரைத் துன்புறுத்தியதாலேதான் இவர்க்கு இந்நோய் வந்தது!’ என்று எண்ணி, தம் கணவரை நோக்கி, ‘நாதரே, இந்நோய் திருஞானசம்பந்தரால் நீக்கப்படும். அவரை வரவழையுங்கள்,’ என்று பணிவுடன் கூறினர். அரசரும் அதற்கு உடன் பட்டார்.

60