உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருவரும் புதர் மறைவில் ஒளிந்து கொண்டனர்.

செருப்பிற்கு உரியவன், தன் வேலைகளை முடித்து விட்டு வந்தான்; வழக்கம் போலத் தன் செருப்பில் காலை விட்டான். காலில் ஏதோ ஒன்று உறுத்துவது போலத் தோன்றியது. அவன செருப்பைக் கழற்றிப் பார்த்தான். அதில் ரூபாய் இருக்கக் கண்டான்; உடனே அவன் ஆச்சரியம் கொண்டான்; மற்றொரு காலில் உள்ள செருப்பையும் கழற்றினான்; அதிலும் ஒரு ரூபாய் இருக்கக் கண்டான்; பேரானந்தம் கொண்டான்; ரூபாய்களை வைத்தவர் யார் என்று எண்ணிச் சுற்றிலும் பார்த்தான். ஒருவரும் காணப்படவில்லை; உடனே, முழங்காற்படியிட்டுக் கடவுளைத் தொழுதான்; பின்னர், தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

கோவிந்தன் குடியானவன் செய்ததைக் கண்டு மகிழ்ந்தான். ஆசிரியர், ‘கோவிந்தா, கொள்வதை விடக் கொடுப்பதே நன்று, என்பதை உணர்ந்தாயா?’ என்றார்.

கேள்விகள்:

1. கோவிந்தன் செருப்புகளைக் கண்டு, உபாத்தியாயரிடம் கூறியது என்ன?

2. உபாத்தியாயர் ஏன் கோவிந்தனது வேடிக்கைக்கு ஒத்துக் கொள்ளவில்லை?

3. உபாத்தியாயர் கூறிய விதம் யாது?

4. ரூபாயிருந்த செருப்புக்கு உரியவன் செய்தது என்ன?

5. ‘கொள்வதை விடக் கொடுப்பதே நன்று’ என்னும் நீதியை விளக்கும் கதையைச் சுருக்கி எழுது.

64