பக்கம்:இராஜேந்திரன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

8

இராஜேந்திரன்

ராகவன்: ஒரு நிமிஷத்திற்குள்ளாக நோட்டுகளே வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாலாகாதோ? பின் எப்படித்தான் போயிருக்கும் ரங்ககாத்தின் வேல் தான் இது.

கோவிந்தன்: எப்படிப் போயிருக்கும் என்பதைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். ரங்கநாத்தின் வக்கில் என்ன சொல்லுவாரென்ருல் ருக்மிணி பாங்கிக்கு பணக் கஷ்டம் இருப்பதால் பங்காளிகளாகிய ராஜேந்திரனும் ராகவனும் சேர்ந்து நோட்டுகளே எடுத்து ஒளித்துவிட்டு, கழுவுக்கேற்ற கோமுட்டி ரங்கநாத் என்று அவர்மேல் பழியேற்றிக் சொல்வதாகக் கூறுவர்.

ராகவன்: அவர் சொன்னுல் அவர் வார்த்தையை யார் நம்புவார்கள்? நாங்கள் சதியாலோசனே செய்ததாக வைத்துக்கொண்டாலும் அவருடைய சாவியில்லாமல் பெட்டியை எங்களால் எப்படித் திறக்கக் கூடும்?

கோவிந்தன். தங்களுக்குத் திருப்தியாகும்மடி தெரி விக்கிறேன். அப்பால் நீங்கள் சொல்வதைச் சொல்லுங் கள். உங்களிடமும் ரங்கநாத்திடமும் இருக்கும் இரண்டு சாவிகளேயும் எடுக்காமல் ராஜேந்திரனிடம் இருக்கும் "மாஸ்டர் கீ என்று சொல்லும் ஒரே சாவியைப் போட்டுப் பெட்டியைத் திறக்கக்கூடும் அல்லவா? தாங்களும் ராஜேந் திரனும் சேர்ந்து சதியாலோசனை செய்து அச்சாவியைக் கோண்டு தங்களுக்குத் தெரிந்த பேர்ப்பூட்டைத் திறந்திருக் கக்கூடுமல்லவா? மேலும் வெளிக்கதவைத் திறக்காமல் உங்கள் விட்டிலிருந்தும் ராஜேந்திரன் வீட்டிலிருந்தும் இரும்புப் பெட்டியிருக்கும் அறைக்கு வர வழிகளும் இருக் கின்றனவே! நீங்கள் என் செய்திருக்கக் கூடாது?

ராகவன். எங்கள் பணத்தை காங்களே திருடுவதா? கோவிந்தன். ஏன் செய்யக் கூடாது? சங்கநாத்துக்கு ஜாமீன் கொடுத்தவர்களிடமிருந்து ரூபாய்கள் பெறவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/117&oldid=660497" இலிருந்து மீள்விக்கப்பட்டது