பக்கம்:இராஜேந்திரன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி {2}

கள் கேட்டாயிற்றென்றும் இனி அவர் தம் இஷ்டம்போல் போகலாமென்றும் சொல்லி அனுப்பிவிட்டார். அப்பால் ராஜேந்திரனிடம் அநேக வருஷங்களாக இருந்துவரும் அந்த ரங்க வேலைக்காரனை ராமனேத் தம்முடன் தம் சிறு மூட்டையைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு வர அனுப்ப வேண்டுமென்ருர்.

ராஜேந்திரன்: அவரை மூட்டையை எடுத்துப் போகச் சொன்னல் சற்றுக் கேவலமாக கினேப்பார். அதைவிட எங் கள் தோட்டத்தில் காய்த்த பலாப்பழம் ஒன்றைத் தங்க ளுக்குக் கொடுக்கிறேன். தாங்கள் எடுத்துப் போகக் கூடாதாதலால் வேண்டாமென்று சொல்லுங்கள். அப் போது அவரை அனுப்புகிறேன். -

மணியடித்தார். ராமன் வந்ததும் வீட்டிலிருக்கும் பல்ாப்பழத்தை எடுத்து வரும்படி சொல்லி ராமன் கொண்டு வந்ததும், கோவிந்தனிடம் அதைத் தோட்டத்தில் பழுத்த நல்ல ருசியான பழமென்றும் அதைக் கொண்டு போகும் படியும் சொன்னுள். கோவிந்தன் தாம் கடந்து போக விரும்புவதால் பழத்தை எடுத்துப்போக முடியாதென்று சொன்னர். உடனே அவர், ராமா! இதை இக்கனவான் கூடவே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வா' என்ருர், ராமன் அதை எடுத்துக்கொண்டு கோவிந்தன் கூடவே மெதுவாக கடந்து போனர்.

கோவிந்தன்: ஐயா! உமக்கு இவ்வளவு வயதாகியும் பாவம்! இன்னும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உமக்கு என்ன சம்பளம் கொடுக்கிருர்கள்? இந்த உயர்ந்த சுருட்டைப் பிடித்துக்கொண்டே போனுல் வழி கடக்கும் கஷ்டம் தெரியாது.

ராமன்: எனக்குச் சுருட்டு என்னத்துக்கு அதெல் லாம் தங்களேப் போலொத்த பிரபுக்கள் பிடிக்க வேண்டி யது. நானே எனக்குப் புத்தி தெரிந்தது முதல், ஏன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/120&oldid=660500" இலிருந்து மீள்விக்கப்பட்டது