பக்கம்:இராஜேந்திரன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி #23

ருக்குப் பின்னுல் இவர் சொத்தைக் கால் நாழிகையில் அவர் செண்டாடி விடுவார்! அப்பால் அவரே திண்டாடும் போது என் பாடு எப்படி? -

கோவிந்தன். அவர் அவ்வளவு செலவாளியா? என்ன செலவு செய்கிறர்:

ராமன்: அதுதான் தெரியவில்லை. 10 நாட்களுக்கு முன்வரையில் கித்தியம் பெரும் தொகைகளுக்கு உண்டியல் அனுப்பிவந்தார். ஒரு நாள் நான், 'ஐயா! உங்களிடம் ஒரு வார்த்தை கேட்கிறேன். கோபித்துக்கொள்ள வேண்டாம். தாங்கள் சிறுவர்; இவ்வளவு ரூபாய்கள் செலவழித்தால் எப்படி? என்ன செலவு செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். உடனே, "அடே ராமா! அற்பப் பதரே! அந்தத் தடியன் ராகவன் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு நீ என்னேக் கேட்டாயோ? இன்னுெரு தரம் இப்படிக் கேட்பாயாகில் என் பூட்சால் உதைப்பேன்" என்ருர். நான் பிள்ளேயாகப் பிறந்து பெரிய எஜமான்கள் இருவரிடமும், அடே' என்ற வார்த்தையைக் கேட்டு அறியேன். இவரிடம் வேலே செய்தால் பூட்ஸ் அடி கூடப் படும்படி நேரிடும்போல் இருக் கிறதே என்று அன்று முதல் நான் அவர் ஜோலிக்குப் போவதில்லை. எஜமானரவர்களின் கண் முன்பாகவே என் கனக் கூப்பிட்டுக்கொள்ள வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.

கோவிந்தன். சரி, பெரிய இடத்துக் காரியம்; எப்படியா வது போகட்டும்; நமக்கென்னர் இன்று ஏதோ ஐந்து லட்ச ரூபாய் நோட்டுகளும் கோபாலபுரம் வைரங்களும் காணுே மென்று உன் எஜமானர் விசனித்திருப்பதாகத் தெரிவித் தார். ஆலுைம் அ ந் த கோட்டுகள் எப்படித்தான் போயிற்ருே தெரியவில்லையே.

ராமன்: அதென்னமோ பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கி.மணிக்குத்தான் ஒரு பெரிய சுமை நோட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/122&oldid=660502" இலிருந்து மீள்விக்கப்பட்டது