பக்கம்:இராஜேந்திரன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி 125

யில் ரங்கநாத் லகஷ்மியைத்தான் கல்யாணம் செய்துகொள் னப் போகிருரென்ற சத்தம் உண்டாயிற்று. இப்போது -ே மாதங்களுக்கு முன்னுலிருந்து ரங்கநாத்தும் லகஷ்மியும் பேசு வதே இல்லை.

கோவிந்தன்: அப்படி இருப்பதற்குக் காரணமென்ன? ராமன்: யாருக்கும் தெரியாது; ஏதோ இருவருக்கும் மனவருத்தம்போல் இருக்கு. எனக்கு அவ்வளவு சரியாய்த் தெரியாது.

கோவிந்தன். சரியாய்த் தெரியாது என்கிறீர்களே! உங்களே என்ன கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்திப் பிர மாண வாக்கு மூலத்தின் மேலா கேட்கிருர்கள்? ஏதோ வழி நடைப் பேச்சாகவும் நேரப்போக்காகவும் பேசிக்கொண்டு போகிருேம். உமக்குத் தெரிந்ததைச் சொல்லுமே; இதில் என்ன கஷ்டம்? r

ராமன்: வழக்கம்போல் ஒரு நாள் சாயங்காலம் ரங்கநாத் தும் லகஷ்மியும் தோட்டத்திலுள்ள பெஞ்சியில் உட்கார்ந்து. பேசிக்கொண் டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலாலும் எனக்கு வேலையில்லாததாலும் நான் அங்கே போட்டிருந்த ஒரு பெஞ்சியின் கீழ் அவர்கள் வருமுன் னேயே படுத்துத் துரங்கிக்கொண் டிருந்தேன். நானிருந்தது அவர்களுக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன். லகஷ்மி அழுதுகொண்டே பேசிய மாதிரி சத்தம் கேட்டதும் திடுக் கிட்டு விழித்துப் பார்த்தேன். அப்போது இரண்டொரு வார்த்தைகள்தான் என் காதில் கேட்டது. இருவரும் தாழ்ந்த குரலில் பேசியதால் எனக்கு நன்ருய்க் கேட்க வில்லை.

கோவிந்தன். நீங்கள் கேட்டதைச் சொல்லுங்களேன். ராமன்: அவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் மறக் குங் காலம் வந்துவிட்டதென்றும், தான் வேருெருவரைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி நேரிடும்போல் இருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/124&oldid=660504" இலிருந்து மீள்விக்கப்பட்டது