பக்கம்:இராஜேந்திரன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இராஜேந்திரன்

தென்றும், அதுமுதல் அவர் வெளியில் ஜாகை வைத்துக் கொள்ளுவதே நலமென்றும் லகஷ்மி சொன்னதுபோல் இருந்தது. அப்போது ரங்கநாத், தாம் செய்த தவறு என்னவென்று அழாத துக்கமாய்க் கேட்டார். அப்போது லகழ்மி இன்னும் அதிக துக்கத்துடன் நாம் இப் பிறப்பில் புருஷன் பெண்சாதியாக இருக்க முடியாமற் போவதற்காக அதிக வருத்தப்படுவதாயும், .567&r ரங்கநாத் உண்மை யாக நேசித்தால் தான் கேட்டுக்கொண்டபடி கட்டாயமாய் நடந்து வரவேண்டுமென்றும் அவள் உடலை வேருெரு வருக்கு ஒப்பிக்க நேரிட்ட போதிலும் அவர்கள் இருவர் ஆத்துமாக்களேயும் பிரிக்க எவராலும் சாத்தியமாகாதென் றும் அழுதபடியே சொன்னுள். ரங்கநாத் அப்பால் ஏதோ பேசிவிட்டுக் கண்களிலிருந்து நீர் வடிந்தபடியே சென்ருர், லகஷ்மியும் அழுதுகொண்டே போய்விட்டாள்.

கோவிந்தன். ரங்கநாத் அதற்குப் பின்னுல்தான் இரவு களில் வெளியே போகிருரா என்ன?

ராமன்: அன்றையவரையில் வீட்டைவிட்டு எங்கும் சென்றதே கிடையாது. அதற்கப்பால்தான் வாடாவழியாக

கோவிந்தன்: ராகவனுக்குப் பெண்ணே யாருக்குக் கொடுக்க இஷ்டம்?

ராமன்: ரங்கநாத்துக்குத்தான் கொடுக்க வேண்டு மென்று இருந்தார். அவர் தம் பெண்ணேக் கவனியாமல் போகிருரென்றுதான் அவர் பேரில் கோபமும் விரோதமும் போல் இருக்கிறது.

கோவிந்தன். அவருக்கு இன்னும் அப்படி அபிப் பிராயம் இருக்கிறதென்று உமக்கு எப்படித் தெரியும்:

ராமன்: ஒரு பதினேந்து நாட்களுக்கு முன் தமக்குள் ளாகவே, இருந்தாற்போலிருந்து அவனுக்கு வந்த

கேடென்ன? நமது லகஷ்மியின்பேரில் எவ்வளவு பிரியமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/125&oldid=660505" இலிருந்து மீள்விக்கப்பட்டது