பக்கம்:இராஜேந்திரன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி #27

இருந்தவன் இப்போது அவள் இருக்கும் திசையைக்கூடப் பார்ப்பதில்லையே. என்ன காரணமாயிருக்கலாம். எனக்கு இருக்கும் ஒரே பெண்ணுக்குத் தகுந்தவன் அவனே. வேறு எவருக்கும் கொடுக்க எனக்கு மனம் வரவில்லையே. வேறு தக்க வரனே எங்கே போய்த் தேடுவது' என்று இவ்வாருக மெதுவாகத் தமக்குத் தாமே பேசிக்கொண் டிருந்தார்.

கோவிந்தன். ராகவனின் மனைவியினது போக்கு எப்படி?

ராமன்: ஐயா! எனக்குத் தெரியாது. ஒன்றைமட்டும் கவனித்தேன். சுமார் மோசங்களாய் எப்போதும் லகஷ்மி யும் அவள் தாயாரும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருக்கிருர்கள்.

கோவிந்தன். ராகவனுககு ஏதாவது கெட்ட குணங் களுண்டா?

ராமன்: ஐயா! எனக்குத் தெரிந்தவரையில் அவர் மிகவும் யோக்கியர்தான், தீய குணமென்பதைக் கனவிலும் கினேயாதவர். அயல் வீடு போகார் யாராவது இஷ்டர்கள் அதிகத் தொந்தரவு செய்தால் எனது எஜமானர் கூடப் போவார். தனியாய் எங்கும் சென்றதே கிடையாது. திருஷ்டாந்தமாக நேற்றுத் தங்கசாலேத் தெருவில் நடந்த ராமதாஸ் சரித்திர காலட்சேபத்திற்கு வரும்படி நூறு தடவை வந்து அவரைக் கூப்பிட்டதன்பேரில்தான் அவ ரும் ராஜேந்திரனும் நேற்றைய இரவு சென்ருர்கள்.

கோவிந்தன். அவர்கள் இருவரும் கேற்றிரவு வீட்டில் இல்லையோ? -

ராமன்: இருவரும் காலட்சேபத்திற்கு 9.மணிக்குப் போய் இரண்டு மணிக்குத்தான் வந்தார்கள்.

கோவிந்தன்: இன்று உமது எஜமானர் உத்தரவின் பேரில் ஒரு பெட்டியைக் கொண்டு வந்திரே; அந்தப் பெட்டி எப்போதும் எங்கிருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/126&oldid=660506" இலிருந்து மீள்விக்கப்பட்டது