பக்கம்:இராஜேந்திரன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி 123

தெரிந்த வரையில் உபயோகப்பட்டதே கிடையாது. எப் போதும் அக்கதவுகள் பூட்டப்பட்டுத்தான் இருக்கும், நான் அவைகளின் வழியாய் எவரும் வந்ததை இது வரையில் பார்த்ததேயில்லே.

கோவிந்தன்: நேற்று இரவு இரும்புப் பெட்டி வைத் திருக்கும் அை றயின் வெளியில் யார்யார் படுத்திருந்தார் கள்? யாராவது வந்து கதவைத் திறந்தார்களா?

ராமன் : நானும் இன்னும் இரண்டு வேலைக்காரரும் இருந்தோம். நான் எப்போதும் இங்கே படுத்துக்கொள் வதே யொழிய, காவல் இருக்க வேண்டியது மற்ற இருவர் தாம். அவர்கள் இருவரில் ஒருவர் இரவு 12-மணி வரையி லும் மற்றவர் காலே .ேமணி வரையிலும் விழித்திருப்பார் கள். வழக்கம்ப்ோல் நான் துரங்கிக்கொண் டிருந்தேன். கதவை யாரும் திறக்கவேயில்லை. ஏனென்ருல் கதவைத் திறந்தால் என்னேத் தள்ளிவிட்டுத்தான் திறக்கவேண்டும். கோவிந்தன்: அறைக்குள் ஏதாவது சத்தம் கேட்டதா? ராமன்: ஏதோ ஆள் நடமாடுவதைப்போல் சத்தம் கேட்டதாகக் காவற்காரர்கள் சொன்னுர்கள். நான் கவனித்த தில் ஒன்றுமே யில்லை. எப்போதும் அவர்கள் ஜடாமுனி ஒன்று நடமாடுவதாகச் சொல்வது வழக்கம். அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே! நேற்று வெள்ளிக்கிழமை யானதால் ஜடாமுனியை கினைத்துக் கொண்டே இருப்பார்கள். அது நடந்ததுபோல் தோன்றி யிருக்கும்.

அதற்குள்ளாகக் கோவிந்தன் வீடு வரவே பலாப் பழத்தை வாங்கிகொண்டு ராமனுக்குப் பலகாரங்களும் காபியும் திருப்தியாகக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

.فوسيقي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/128&oldid=660508" இலிருந்து மீள்விக்கப்பட்டது