பக்கம்:இராஜேந்திரன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை 137

யக் கூடாது என்பதற்கு உங்களுடைய பேச்சே போது மானது. உங்களுடைய வார்த்தைக்கு எதிரிடையாகவே உறவு-அக்காளாகிய நீங்கள் உடன்.பிறப்பு அக்காள்போல நடந்துகொள்ள முயல்கிறீர்கள். இது சரியாகாது. மேலும், லீலாவதி, நாம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை முற்றும் மறந்து நீ சோபாவில் என் பக்கத்தில் உட்கார வந்தது கியாயங்தான?

லீலா: முற்றும் கி.பாயந்தான். அக்கா என்ற உறவு நீங்கள் கொண்டதே பன்றி நான் அப்படி அழைக்கும்படி கூறவேயில்லை. உடன்-பிறப்பு அக்காவும் கானல்ல; உறவு. அக்காவும் 157675ುಖ. ஆதி முதற்கெர்ண்டு நான் தங்கள் அன்பு ஒன்றுக்கே அடிமையானவள். தங்கள் அன்புக்குரிய வளாய்த் தங்கள் ஆதரணைக்கு உட்பட்டு என் ஜீவகால முழு தும் தங்களேயே எனது ரக்ஷகராக, பிராணுதாரமாகக் கொண்டு இரு ந் து வி ட நிக்னத்து அதனேயே நாடி

நடந்தவள்.

அத்ற்கு ஏற்பவே என் பேச்சுகளும் குறிப்புச் சொம் களும் இருந்து வந்திருக்கின்றன. இதல்ை நான் முன் னுெரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் நடக்கிறே னென்று என்னேக் குற்றங் கூற ஒரு சிறிதும் இடமில்லை. அன்றியும், தாங்கள் சொன்ன தேதியில் ஏற்பட்ட உடன் படிக்கையின்படி தாங்கள் மாத்திரம் உடன்படிக்கையை மீறி நடக்கலாம்; நான் நடக்கக்கூடாதா? மேலும் நான் என்ன அப்படி அக்கிரமமாக நடந்துவிட்டேன். தாங்கள் உட்கார்ந்திருக்கும் சோபாவில் தங்கள் சமீபத்தில் உட் கார்ந்துகொண்டு தங்களுக்குச் சிற்றுண்டிகளைக் கொடுக்க முயன்றதில் என்ன முழுகிப்போயிற்ருே தெரியவில்லை. நான் உங்களின் உறவு-அக்காவாகப் பக்கத்தில் உட்கார வந்திருந்தால். நீங்கள் ஆட்சேபிப்பது பொருந்தும் தகும். நானுே உங்கள் அன்புக்குரியவள் என்ற ஸ்தானத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/136&oldid=660516" இலிருந்து மீள்விக்கப்பட்டது