பக்கம்:இராஜேந்திரன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம்

ருக்மிணி : கேட்பதற்கு கியாயம் சொல்லத் தெ விட்டால் இந்த மாதிரி பேசி முடிப்பது ஒரு சாமர்த்தி போல் இருக்கிறது. நான் இப்படியே வருகிறேன். எனக்கு இருக்கும் அழகே போதும்.

கற்ருேர்க்குக் கல்வி கலனே கலனல்லால் மற்ருேர் அணிகலன் வேண்டாவாம்-முற்றும் முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே அழகுக் கழகுசெய் வார். .

நான் அலங்காரங்கள் செய்துகொண்டு அதிலும் இரவல் நகைகள் போட்டுக்கொண்டு சிங்காரங்களோடு கோவிலுக் குப் போகவும் வேண்டாம்; என்னேக் கண்டு பலர், 'ருக்மிணி எவ்வளவு அழகாயிருக்கிருள்' என்று சொல்லி மெச்சவும் வேண்டாம்.

ரங்கம்மாள் : எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கேட்காதவர் களே எல்லாம் கேட்டுக் கெஞ்சிக் கூத்தாடி நான் நகைகள் வாங்கிக் கொண்டுவந்து, உனக்குப் போட்டு என் கண்ணுரக் கண்டு களிக்க வேண்டுமென்று போட்டுக்கொள்ளச் சொன் குல் நீ தலைக்குமேல் ஏறுகிருயே: அட சீ, நீயோ ே கெட்ட கேடோ! உன்னே அம்மா, அரசே என்ருல் நீ சொன்ன பேச்சுக் கேட்டாயோ? உன்னே எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லவேண்டும்; இப்படி வந்து உட்காருகிருயா? இல்லையா? வராவிட்டால் தெரியுமா என் சேதி ஏதோ நல்ல தனமாய்ச் சொல்லும்போதே வந்துவிடு. ரங்கம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டால் சமுத்திரங்கூடப் பொறுக்காதென்று சொல்லுவார்கள், ஜாக்கிரதை இப் போதாவது வந்து உட்கார்ந்து நான் சொல்லுகிறபடி நடந்துகொள்.

'இவள் ஒரு பிசாசைப்போல் இருக்கிருள். இவள் பேச் சைக் கேட்காவிட்டால் ஒருகால் அவமானமடைய நேரிடும்

போல் இருக்கிறது. ஆகையால் இவளிடம் இருக்குமளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/14&oldid=660394" இலிருந்து மீள்விக்கப்பட்டது