பக்கம்:இராஜேந்திரன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை #3

ஆமாறு சொன்னர். அப்போது ஒருவர் வெளியில் உறு மியதாகச் சத்தம் கேட்டது.

துதாத் : லீலா, முன்னமே துக்க சாகசத்தில் மூழ்கி யிருக்கும் என்னேக் கழுத்தைப் பிடித்துத் தண்ணிருக்குள் அமுக்குவதைப்போல் கொஞ்சமாவது மாதர்களுக்கு இருக்க வேண்டிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்களுக்கு முற்றும் மாருக என்னேத் திடீரென்று பலவந்தமாகப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டாயே ே இந்தது சரிதான கேவலம் விலை மாதரும் இப்படிச் செய்யமாட்டார்களே! இனி இந்த இடத்தில் கால்கூட எடுத்து வைக்கமாட்டேன். முதலில் நான் உன்னேச் சந் இத்தபோது நீயும் துக்க சாகரத்தில் மூழ்கி அழுதுகொண் டிருந்தாய். நானும் விசனத்தில் ஆழ்ந்திருந்தேன். காம் இருவரும் வெகு நேரம் சிங்காரத் தோட்டத்தில் விசனமாய் உட்கார்ந்திருந்ததன் காரணமாக நமக்குள் அன்பு ஏற்பட் டது. அன்றே நாம் இருவரும் உடன்-பிறப்பான அக்காள் தம்பிபோல் நடந்துகொள்வதாக வாக்குறுதி செய்துகொண் டோம். அன்று முதற்கொண்டு உனக்கு வேண்டிய செளகரியங்களேச் செய்து கொடுத்தேன். நீ இன்று அதற்கு முற்றும் விரோதமாக கடந்துவிட்டாய். இன்று முதல் நீ வேறு. நான் வேறுதான்.

லீலா: ஐயா, நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் தயவு செய்து சரியான ஜவாபு சொல்லுங்கள் பார்ப்போம். என் னேப்போல் அழகிய யுவதி ஒருத்திக்குத் தங்களேப் போலொத்த விட புருஷர் பங்களா ஒன்று அமர்த்திக் கொடுத்து, அதற்கு வேண்டிய சோபாக்கள், நாற்காலிகள், கட்டில்கள் முதலிய சகல தட்டுமுட்டுச் சாமான்களேயும் தங்கள் செலவில் வாங்கிக் கொண்டுவந்து போட்டு, மூன்று மாத காலமாய் வீட்டுச் செலவுகளேயும் செய்து வேடிக்கை யார்த்தமாக என் அக்காவாய் வைத்திருக்கிறேனென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/142&oldid=660522" இலிருந்து மீள்விக்கப்பட்டது