பக்கம்:இராஜேந்திரன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை 145

வழியில் புகும்படி நேரிடும் என்று நம்பி, ஒரு பெண்மணி யின் கற்பையாவது காத்தோமென்னும் ஒரு திருப்தி என் மனத்தில் உண்டாகுமென்றும், அன்றையவரையில் என் பிராணனுக்குச் சமானமாய் நான் பார்த்து, ஒருவரை ஒரு வர் விரும்பி, விவாகம் செய்துகொள்வதாய் நிச்சயித்திருந்த ஒரு பெண்மணி, திடீரென்று அவளிடம் அதுமுதல் நான் பேசக் கூடாதென்றும், எங்கள் இருவருக்கும் கல்யாணம் என்ற பேச்சே காற்றில் விட்டு விடப்பட வேண்டுமென்றும், தீர்மானமாய் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகச் சொல்லிவிட்டதாலும் ஏதோ நேரப் போக்குக்காக மகா பதி விரதா சிரோமணியாகப் பாவித்த உன்னுடன் பேசி, வாசித்து, சதுரங்கமாடிக் காலத்தைக் கழிக்கலாமென்னும் எண்ணத்துடன் இப்படிச் செய்தேனே தவிர, நீ நினைத்த படி உன்னுடன் கூடிக் குலாவி யிருப்பதற்காகச் செலவு செய்யவில்லை. ஆகையால் இன்றுமுதல் நீ வேறு தான் வேறுதான்.

லீலா சரி, தங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள் ஆணுல் ஒரு வார்த்தை தாங்கள்தான் செய்தீர்களென்று ஏற்பட் டிருக்கும் திருட்டைத் தாங்கள் செய்யவில்லையென்றும், இன்னுர்தான் செய்தார்களென்றும் நான் என் சாமர்த்தி யத்தால் பிரயாசைப்பட்டுக் கண்டு பிடித்து ரூபித்தால், அப்போதாவது என்னேக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறீர்களா!

ரங்கநாத்: யாரை உன்னேயா? நான? வேசியையா கல் யானக் செய்துகொள்ள வேண்டும்? .

லீலர்: ஐயா, தாங்கள் கினேக்கிறபடி நான் வேசியு மல்ல; தாசியுமல்ல. தங்கள் பேரில் இருக்கும் அதிகமான பிரியத்தால் தூண்டப்பட்டுப் பைத்தியம் பிடித்தவள்போல் பேசினேன். தாங்கள் கல்யாணம் செய்துகொள்ளச் சம்ம திக்காவிட்டால் என்னே அபிமான பத்தினியாக வைத்துக்

இ-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/144&oldid=660524" இலிருந்து மீள்விக்கப்பட்டது