பக்கம்:இராஜேந்திரன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இராஜேந்திரன்

கூடியவரையில் மரியாதையாக இருந்துவிட்டுத் துரிதமாக ஊர் போய்ச் சேரவேண்டும்’ என்று தன் மனத்திற்குள் எண் ணிக்கொண்டு ரங்கம்மாள் சொன்னபடி தலைவாரிப் பின்னிக் சேர்ப்புப் போட்டு முகம் கழுவி இரவல் நகைகளே யெல்லாம் போட்டுக்கொண்டு பச்சைக் கொறமாட்டுப் புடைவை உடுத் துப் பொட்டிட்டுத் தலையில் புஷ்பம் அணிந்து ரங்கம்மாள் கூட ருக்மிணி கோவிலுக்குப் போனுள்.

அவ்வளவு அலங்காரங்கள் செய்திருந்த ருக்மிணியின் முகமானது வருத்தத்தைத்தான் காட்டிற்று. அவள் கும்ப லோடு கலக்காமல் தனியாகவே, கும்பல் வந்தபோது வில கிக்கொண்டும், பெண்கள் மேல் விழுந்துகொண்டு போவ தையே ஒரு விரதமாகக் கொண்டு கோவிலுக்குப் போகும் ஆடவர்கள் வரும்போது, இன்னும் அதிகமாக விலகிக் கொண்டும் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கே போன பின்கூடப் பெண்கள் கூட்டத்தோடு கலக்காமல் துரத்தில் ஒரு மூலையில் நின்றுகொண்டு பெருமாளேச் சேவித்துகின்றளே யொழிய அவ்விடத்தில் வந்து கேலி பண்ணிக்கொண்டும், இன்னும் எழுத ஒண்ணுத அக்கிரமங் களேச் செய்துகொண்டும் இருந்த ஏனேய பெண்களுடன் அவள் கலந்து கிற்கவில்லை. அவள் தூர இருந்ததாலும், தனியாக இருந்ததாலும், அவளுக்குச் சடகோபங்கூடக்

சாதிக்கவில்லை. ரங்கம்மாள் கூச்சல் போட்டதன் பேரில் தான் தீர்த்த, திருத்துழாய்ப் பிரசாதங்கள் மட்டும் கிடைத் தன. பொங்கல் முதலிய பிரசாதங்கள் ருக்மிணிக்குக் கொடுக்கப்படவும் இல்லை; அவள் கும்பலில் போய் வாங்க வும் இல்லை. கும்பல் கலந்த பின் வெளிவருவதாக ருக்மிணி ஒரே பிடியாய்ச் சாதித்துவிட்டதாலும் ருக்மிணி அங்கே கின்றுகொண் டிருப்பதில் ரங்கம்மாளுக்கு அதிருப்தி இல்லே யாதலாலும் வேட்டை நாய்களால் துரத்தப்பட்ட மான் குட்டியானது எப்படிப் பயமடைந்து கிற்குமோ அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/15&oldid=660395" இலிருந்து மீள்விக்கப்பட்டது