பக்கம்:இராஜேந்திரன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலத்தின் ரகசியங்கள் 153

கேட்டோம். அப்போது அங்குள்ள பெண்களில் சிலரைக் காட்டி அவர்கள் எல்லாரும் பிராம்மணப் பெண்கள்தாமென் லும் கோதை என்னும் பிராம்மனப் பெண் மா தம் ஒன் றுக்கு ரூபா 150 சம்பளம் பெறுவதாயும் சொன்னுள். காங் கள் ஒன்றும் பதில் சொல்லாமல் ஒடி வந்துவிட்டோம்.

அதற்கு ஒரு வாரத்திற்குப் பின் மார்கழிமீ வைகுண்ட ஏகாதசியின் காலத்தில் வழக்கமாக மாமூலாய் வரும் வாந்தி பேதியால் காலேயில் என் தாயாரும் மத்தி யான்னம் என் தகப்பருைம் இறந்தனர். தாய் தகப்பனே ஒரே காளில் இழந்துவிட்டவளாகிய எனக்கு ஊரிலுள் ளோர் ஆதரவு சொல்லி, என் துக்கத்தைத் தீர்ப்பதற்குப் பதிலாக, நான் பிறந்த கெட்ட காலத்தால்தான் என் பெற்ருேர்களே விழுங்கிவிட்டேனென்றும், நான் மகா கொடி யவளென்றும், என் முகத்தில் விழித்தால்கூட எட்டு காட் களுக்குச் சாப்பாடு அகப்படாதென்றும் வருவார் போவா ரெல்லாம் கன்னத்தில் இடித்து இடித்துத் திட்டினர்கள். எனக்கோ அங்கே நெருங்கிய பந்துக்கள் யாரும் இல்லை. சாப்பிட்டாயா என்று கேட்பதற்குக்கூடத் திக்கில்லே. அவ் வளவு ஸ்திதியில் நான் இருந்தபோது பாலாமணியம்மாள் அழைத்துவரச் சொன்னதாக ஒருவர் வந்து கூப்பிட்டார். நான் வர முன்பின் யோசித்ததைக் கண்டு பலவிதமான யுக்தி வார்த்தைகளால் என்னே மயக்கி அழைத்துச் சென்ருர். - -

என்னேக் கண்டதும் பாலாமணியம்மாள் அதிக வருத் தப்பட்டுத் தேறுதல் சொல்லி, சாப்பாடு வைக்கும்படி ஏற் பாடு செய்தாள். பின் உயர்ந்த கொறனுட்டுச் சிற்ருடையும் ரவிக்கையும் கொடுத்து அணிந்துகொள்ளச் சொன்னுள், நானும் உடுத்துகொண்டேன். எப்போது அவர்கள் உடையை நான் உடுத்துக்கொண்டேனே அது முதல் கான் அவர்களோடு சேர்ந்தவள் என்பதில் தடையென்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/152&oldid=660532" இலிருந்து மீள்விக்கப்பட்டது