பக்கம்:இராஜேந்திரன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலத்தின் ரகசியங்கள் 155

அதுவரையில் எனக்குச் சம்பளமாகக் கிடைத்த சுமார் 1500 ரூபாய்களேயும் அந்த அம்மாள் எனக்குச் செய்து போட்ட சுமார் 1000 ரூபாய் பெறுமான கைகளேயும் வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் இருந்த என் அத்தையம்மாள் விட்டில் நான் இரண்டு மாதங்கள் வசித் தேன். அப்போதுதான் உன் தகப்பனுரான ராகவர் என்னேக் கண்டதும் நான் காடகாலங்கார சோபிதையாகை யால் என் அழகில் ஈடுபட்டு என்னேக் கல்யாணம் செய்து கொடுக்கும்படி என் அத்தையிடம் கேட்டார். எனக்குப் புத்தி அறியும் சமயம் வந்துவிட்டதாலும் இனி நாடகக் கம்பெனியில் இருக்கச் சம்மதம் இல்லாமையாலும் இயற்கை யாகவே உன் தகப்பனுரைக் கண்டதும் அவர் எனக்குத் தகுந்த காதவைாரென்று என் மனமானது அவரை நாடிச் சென்றதாலும் கல்யாணத்திற்குச் சம்மதித்தேன்.

கல்யாணமும் கடந்துவிட்டது. கல்யாணமான ஆ. மாதங்களுக்குப் பின் நான் புஷ்பவதியானேன். அப்பால் - !!! {Tರ್ಿ'

சோபன முகூர்த்தம் கடந்தது. சோபன முகூ மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் நாடகம் பார்க்க அழைத்துப் போகும்படி உன் தகப்பனரிடம் நான் கேட்டேன். அப்போது உலகத்தில் அவர் நாடகத்தையே அதிகமாய் வெறுப்பதாயும், அதிலும் நடிகர்களே இன்னும் அதிகமாய் வெறுப்பதாயும் பெண் நடிகர்களேக் காணக்கூடச் சகிக்க மாட்டாரென்றும், அதிலும் தாசிகளல்லாத வேறு குலத்து மாதர் நடிகர்களாக இருப்பதைக் கண்டுவிட்டால் அவர் களேவிட உலகத்தில் அவர் வெறுக்கக்கூடிய வஸ்து வேருென்று இல்லையென்றும், ஆகையால் நாடகப் பேச்சே எடுக்கக் கூடாதென்றும் அவ்வளவு கடுராய்ச் சொன்னுர்: அன்றே நான் நாடகத்திற் சேர்ந்திருந்தவிஷயம் அவருக்குத் தெரிந்தால் என்னே விட்டை விட்டு ஒட்டிவிடுவாரோ என்னவோ என்னும் பயம் என் மனத்தில் குடிகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/154&oldid=660534" இலிருந்து மீள்விக்கப்பட்டது