பக்கம்:இராஜேந்திரன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 இராஜேந்திரன்

ஆரம்பித்தது. நான் நாடகத்தில் சேர்ந்திருந்த விஷயத்தை அவருக்குத் தெரிவித்தால் என்ன அகர்த்தம் விளேயுமோ வென்று பயந்து இதுவரையில் சொல்லாமலே இருந்து விட்டேன். சுமார் மூன்று மாதங்களுக்கு முன் லீலாவதி சென்னேக்கு வந்தவள் என்னேப் பார்க்க விரும்புவதாக நம்மை இப்போது ஹிம்சிக்கும் சனியனிடம் சொல்லி யனுப்பினுள். நாடக பாத்திரங்களில் லீலாவதி அதிகப் பேர் பெற்றவ ளானதுபற்றி அவள் இங்கே வருவதை உன் தகப்பனர் பார்த்தால் அதிலிருந்து நானும் அவளும் முன் நாடகத்தில் சேர்ந்திருந்த விஷயம் எங்கே உன் தகப்பனர் காதுக்கு எட்டிவிடுகிறதோ என்று பயந்து, இந்தச் சனி யனிடம் உண்மையைக் கூறி லீலாவதி என்னேப் பார்க்க விரும்பும் காரணம் எ ன் ன வெ ன்று கேட்டு வரச் சொன்னேன். -

அவர் மறுநாள் வந்து லீலாவதி இப்போது கஷ்ட தசையில் இருப்பதால் ஆயிரம் ரூபாய் கடன் வேண்டு மென்று கேட்கிருளென்றும் இல்லாவிட்டால் பழைய இஷ்டத்தை உத்தேசித்து ஒருமாத காலமாவது தன்னே கமது வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்று அவள் சொன்னதாயும் சொன்னர். அப்போது ருக்மிணி பாங்கியில் பண நெருக்கடி அதிகமாக இருந்ததால் உன் தகப்பனர் கமது விட்டுச் செலவையே வெகுவாகச் சுருக்கி வந்தபோது என்னுல் தொகை கொடுக்க முடியாதென்றும் அவள் இங்கே வந்திருக்கவும் சாத்தியப் படாதென்றும் சொல்லி யனுப்பினேன். அவர் மறுபடியும் அன்று சாயங்காலமே வந்து லீலாவதியே உன் தகப்பனரிடம் நேரில் வந்து பழைய இஷ்டத்தைக் கவனியாமல் நான் இப்படிச் சொல்வதாகச் சொல்லப் போகிருளென்றும், ரூபாய்கள் கொடுத்துத் தொலைப்பதே சிலாக்கியமென்றும் சொன்னர்.

என்னிடம் ரூபாய்கள் இல்லையென்று சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/155&oldid=660535" இலிருந்து மீள்விக்கப்பட்டது