பக்கம்:இராஜேந்திரன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6% இராஜேந்திரன்

கமலம்: நாதா! நமது லக்ஷ்மிக்கு இப்பொழுது வயது #3 ஆகிற து. இனிக் கால ஹரணம் செய்யாமல் விவாகம் முடிக்க வேண்டும். தங்களுக்குத் தெரியாத யோசனையல்ல. நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன்,

ராகவன்: பெண்னே! நீ சொல்வது சரியே. வைகாடு மீ விவாகம் முடித்துவிட வேண்டும். மாப்பிள்ளையை, பற்றித்தான் யோசிக்கிறேன்.

கமலம்: என்ன யோசிக்கிறீர்கள்? ராகவன்: முன் ரங்கநாத்துக்கே லட்சுமியைக் கொடுக்கு வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். இப்போது ரங்கு நாத் கடந்துகொள்ளும் மாதிரியிலிருந்து அவருக்குக் கொடுக்கக் கொஞ்சம் யோசனேயாக இருக்கிறது. அவரை விட வேறு தக்க வரனேயும் காணுேம்.

கமலம்: ராஜேந்திரன் தங்களுக்கு ஆப்த நண்பராக இருப்பதோடு பாகஸ்தராயும் இருக்கிருர். அவருக்கும் நினி வாசன் ஒரே பிள்ளே. நமக்கும் லகஷ்மி ஒரே பெண். அவ் விருவருக்கும் விவாகம் செய்தாலென்ன? தங்கள் அபிப்பிரா யம் எப்படியோ? -

ராகவன்: ரங்கநாத் ஏதோ சில நாட்களாய் ஒரு மாதிரி யாக இருக்கிருர், அதற்குத் தக்க காரணம் எனக்குத் தெரியவில்லை. ரங்கநாத்தும் லகழ்மியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தவர்கள் இப்போது மூன்று மாத காலமாய் ஒருவர் இருக்கும் திக்கைக்கூட மற்றவர் நோக்கா மல் இருக்குங் காரணம் என்ன? உனக்குத் தெரியுமா? பூரீனி வாசன் எப்போதும் நம்மை இழிவாய்ப் பேசுகிருன். மேலும் ராஜேந்திரன் இதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே? நாமாக எப்படிப் பேசுகிறது?

கமலம்: பூரீனிவாசன் துஷ்டன் என்பதைப்பற்றி யோசித்துத் தங்களிடம் எப்படிக் கேட்பதென்று யோசித் துக்கொண் டிருப்பார். அவருக்கும் உங்களுக்கும் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/159&oldid=660539" இலிருந்து மீள்விக்கப்பட்டது