பக்கம்:இராஜேந்திரன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலத்தின் ரகசியங்கள் iš.

விதமான வித்தியாசமும் கிடையாதாதலால் நீங்களாகப் பேசுங்கள்கள்,ார்ப்போம்.

ராகவச அதற்குச் சம்மதித்து மறுநாள் காலேயில் ராஜேந்திரனேக் கண்டு அவ்விஷயமாகப் பேசினர். அவர் தமக்கு லக்ஷ்மியை சங்கநாத்துக்குக் கொடுக்கவே சம்மத மென்றும், லகஷ்மி பூரீனிவாசன முழு மனத்துடன் கல்யா னம் செய்துகொள்ளச் சம்மதித்தால் தமக்கு அத்தியக்த சந்தோஷமாக இருக்குமென்றும்,லகஷ்மியின் வார்த்தையைக் கேட்டு நினிவாசன் நல்லவனுகக் கூடுமென்றும் வைகாசி மர்தத்தில் விவாகம் நடத்துவதில் யாதொரு ஆட்சேப மும் இல்லையென்றும் சொன்னர். இவ்விஷயம் மறுநாள் பகிரங்கமாயிற்று. - -

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் குறிப்பிடக்கூடிய விஷயம் ஒன்று உண்டு.அதாவது எந்தச் சங்கதியையும் ரகசியத்தை யும் நமது பெண்மணிகள் தம் கணவருக்கு...அவர் அறி யாதபடி மறைத்து வைக்கக் கூடாதென்பதுதான். நமது கமலம்மாள் ஆரம்பத்திலேயே தன் நாடக ரகசியத்தை மறைக்காமல் வெளியிட்டிருப்பாளாயின்-அவள் விவாகமான பின்பே புஷ்பவதியாயினமையின்-ராகவன் அவளே வெறு த்து ஒதுக்கி இருக்கமாட்டார். சிறிது வருத்தத்தோடு அவ்விஷயம் அடக்கப்பட்டுப் போயிருக்கும். அப்படி ராக வன் அந்த ரகசியத்தை அறிந்திருக்கும் பகஷத்தில் கமலம் மான் லீலாவதிக்காவது அவளது துதாகிய ஐயங்காருக் காவது அஞ்சி நடக்க வேண்டி இருந்திராது. அவர்களைத் தன் கணவனேக்கொண்டே அடக்கி யிருக்கலாம். இப் போது எது ஒன்றையும் செய்வதற்கு ஏதுவில்லாமற் போய் விட்டது. - .

தான் நாடகத்தில் இருந்ததைத் தன் கணவனுக்குத் தெரிவிக்க அஞ்சிய கமலம்மாள், இப்போது அதனிலும் பெரிதாகிய பிராமிசரி கோட் பதியிைரம் ரூபாய்க்கு எழுதித்

இ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/160&oldid=660540" இலிருந்து மீள்விக்கப்பட்டது