பக்கம்:இராஜேந்திரன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுவான் கேடு நினைப்பான் ##3

சிரம பரிகாரார்த்தமாயும் இங்கே சற்று நேரம் உட்கார்க் திருக்கிறேன். விசேஷம் ஒன்றுமில்லை.

பூதீனிவாசன்: தங்களுக்கு விசேஷ ஜோலிகள் ஒன்றும் இல்லாவிட்டால் தயவுசெய்து என்னுடன் கூட வாருங்கள். நேரம் எப்படிப் பறக்கிறதென்று பாருங்கள்.

ரங்கநாத் எனக்கு வேலே ஒன்றுமில்லை. இருந்தா லும் சற்று நேரம் ஏகாந்தமாக இருப்பதே உசிதமென்று தினேக்கிறேன்.

ரீனிவாசன்: ஐயர் சங்கநாத் தயவுசெய்து நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள். சென்ற சில நாட்களாய்த் தாங்கள் அதிக துக்கத்துடனேயே இருக்கிறீர்கள். இந்த வயதில் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய சில விஷ யங்கள் நமது மனத்தில் ஏற்பட்டபோதிலும் அவைகளே நாம் கனவாக நினைத்து அப்போதே மறந்துவிட்டுப் பட்சிகளேப்போல் சந்தோஷமாய் ஒடி ஆடித் திரியவேண் டும். எழுந்திருங்கள் இ ன் ரு வ து சந்தோஷமாய்ப் பொழுதுபோக்குவோம்.

ரங்கநாத்தைப் பலவந்தமாய்த் தமது வண்டியில் ஏற்றிச் சாயங்காலமானவுடன் எல்லோரும் சந்தித்தும் பந்தாடியும் பேசியும் வாசி த்தும் இதர விளேயாட்டுக்கள் ஆடியும் பொழுது போக்கும் இடமாகிய தமது கிளப்புக்கு அழைத்துப்போய், அங்கே பலவித விளையாட்டுக் களில் அமர்ந்திருந்த தமது நண்பர்கள் பலருக்கு சங்க நாத்தை அறிமுகப்படுத்திச் சுமார் ஒரு மணி நேரம் பொழுது போக்கியபின் அவ்விடத்திலுள்ள பலகாரச் சாலைக்குச் சென்று வழக்கம்போல் இருவருக்கும் பலகாரங் கள் கொண்டுவரும்படி பூரீனிவாசன் ஒரு சீட்டு எழுதி அனுப்பினர்.

அங்குள்ள வேலைக்காரன் வேருக ஒரு மேஜை தயா சித்து, அதில் இரண்டு டம்ளர்களில் அவர்கள் இருவருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/162&oldid=660542" இலிருந்து மீள்விக்கப்பட்டது