பக்கம்:இராஜேந்திரன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் £65

பூரீனிவாசன் உடனே, 'தின்பண்டங்களேச் சாப்பிடுங் கள். அப்போது அருவருப்புப் போய்விடும்” என்று சொல் லித் தின்பண்டங்களில் சிலவற்றைச் சாப்பிடச் சொல்லி யும், மறுபடியும் டம்ளரிலுள்ள பானத்தைக் குடிக்கச் சொல்லி, திரும்பவும் தின்பண்டங்களே உண்ணச் செய்தும் இப்படியாக மாறி மாறி டம்ளரிலுள்ள பானத்தையும் தட்டி லுள்ள பலகாரங்களேயும் இருவருமாகச் சேர்ந்து சாப்பிட் டுத் தீர்த்தார்கள். அப்போது சங்கநாத்துக்கு அதுவரை யில்லாத மாதிரியாய் ஒருவித மயக்கமும் உத்ஸாகமும் ஏற் படுவதுபோல் இருந்தது. இருக்க இருக்க அவ்வுணர்ச்சி அதிகரித்தே வந்தது. விஸ்தரிப்பானேன்? ரங்கநாத்துக் குக் குடி மயக்கம் தலைக்கேறி இன்னதுதான் செய்கிருே. மென்று தெரியாத விதமாய்ச் சுய புத்தி அவரைவிட்டுப் பறந்தோடிப் போய்விட்டது. அதற்குள்ளாக மணியும் சுமார் ஒன்பதாயிற்று. அங்கிருந்து வண்டி ஏறி இருவரு மாக விடுவந்து சேர்ந்தார்கள், -

ருக்மிணி பாங்கின் மத்தியிலும் அதற்கு இரு பக்கங் களிலும் உள்ள இரண்டு பங்களாக்களில் ஒரு பங்களாவில் ராகவனும் மற்ருெரு பங்களாவில் ராஜேந்திரனும் வசித்து வருகிருர்களென்று நாம் முன் சொன்னதை வாசிப்போர் மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் பங்களாக்களுடன் சேராமல் சற்றுத் தூரத்திலிருக்கும் வெளி வீடு என்று சொல்லும் இடத்தின் மேல்மாடியில் ரீனிவாசனுக்கு ஒரு பக்கமும் ரங்ககாத்துக்கு மற்ருெரு பக்கமும் தனியாக ஜாகை கள் இருந்தன. அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்களென்று நாம் சொன்னதில் அவர்கள் ஜாகைக்குத்தான் வந்தார் களென்று நமது வாசகர்கள் மனத்தில் வைக்கவேண்டும்.

வண்டியிலிருந்து ரங்கநாத் இறங்கியதும் தமது அறைக்குப் போகச் சென்ருர். பூரீனிவாசன் அவரைப் போகவிடாமல் தடுத்துத் தம் - அறைக்கே அழைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/164&oldid=660544" இலிருந்து மீள்விக்கப்பட்டது