பக்கம்:இராஜேந்திரன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 இராஜேந்திரன்

நாம் பந்தாடி ஜயித்ததைப்பற்றிப் பேசிக்கொண்டு வந்த வன் மோகினி பிடித்தவன்போல் மெளனஞ் சாதித்துக் கொண்டு ஊருக்கும் வரமாட்டேன் என்கிருய், வெளியிலும் வசமாட்டேன் என்கிருய், ஏன் நமது வகுப்பில் உள்ளவர்க ளெல்லாம் எங்கேயாவது போல்ை அங்கும் இங்கும் பார்ப் பது வழக்கம். ஆல்ை ேேயா மாத்ருவத் பரதாரேஷன், பரத்ரவியேஷா லோஷ்டவது, ஆத்மவத் சர்வபூதேஷா, யத்வஸ்த்திதி சபண்டிதஹா என்னும் சுலோகத்திற்கு இன்க்கப் பர மாதரை யெல்லாம் உன் தாயாருக்குச் சமான மாகவும்.அன்னியருடைய சொத்தைக் கல்லுக்குச்சமானமாக வும் எண்ணி, உன்ன்ேப் போலவே மற்றவர்களேயும் நடத்தி வருபவனுதலால் உன்னேப்பற்றி எந்தவிதமான கெட்ட எண் னமும் கினேக்க மார்க்கமில்லை. இப்படி நிற்பது யேல்லர்து வேறு ஒருவகை இருந்தால் இவ்விடத்திலுள்ள எந்தப் பெண்ணுவது உன் மனத்தைக் கவர்ந்துவிட்டாளென்று சந்தேகிக்க இடம் நேரும். ஆல்ை உன் விஷயத்தில் அப் பேர்ப்பட்ட சந்தேகம் ஏற்படவில்லை. ஆகையால் நீ உண் மையைச் சொன்னல் ஒழிய நான் போகவே மாட்டேன்.

ராஜா: ராகவா, இங்கே வரும் வரையில் புத்தி சுவா இனத்தோடு இருந்ததும் இங்கே வந்த பின் என் புத்தி பிரமை அடைந்திருப்பதும் உண்மையே. உனக்குச் சரி யான காரணம் சொல்ல என்னல் கூடவில்லை. இங்கிருக்கும் ஒரு வஸ்து என் மனத்தைக் கவர்ந்துவிட்டது. ஆகையால் என் சித்தப்பிரமை தீரும் வரையில் என்னுல் இங்கிருந்து அடியெடுத்து வைக்கச் சாத்தியப்படாது. உனக்கோ ரெயி லுக்கு நாழிகை யாகிவிட்டது. நீ இனி தாமதித்தால் ரெயில் போய்விடும். நாளேக்கு முக்கியமாகிய பரீட்சை நாள். ஆதலால் நீ தாமதிக்காதே. உடனே புறப்படு.

ராகவன்: எனக்கு மாத்திரம் பரீட்சை உனக்குப் பரீட்சை இல்லையோ? உனக்கு ஆனது எனக்கும் ஆகட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/17&oldid=660397" இலிருந்து மீள்விக்கப்பட்டது