பக்கம்:இராஜேந்திரன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 173

கிறது. இல்லாவிட்டால் எப்படியோ இருக்கிறது. நீங்கள் இன்னுரென்று எனக்குத் தெரியாவிட்டாலும் எப்படியோ தங்களிடத்தில் எனக்கு அபாரமான நம்பிக்கை இருக்கிறது. இப்படிச் சமீபத்தில் உட்காருங்கள்.

உடனே ரங்கநாத் அவள் சமீபத்திற் சென்று அந்தச் சோபாவில் அவளேப் படுத்துக்கொள்ளும்படி செய்தார். படுத்த 5 கிமிஷத்திற்குள் அவள் கண் அயர்ந்து விட்டாள். ரங்கநாத் மணியைப் பார்த்தார். சரியாக இரவு பன்னிரண்டு மணி. மெதுவாக அங்கிருந்து எழுந்துபோய்ச் சத்தம் போடாதபடி கதவைத் திறந்து வெளியில் பூட்டுப் போட்டு விட்டு இறங்கிப்போய் ராகவன் வீட்டில் இருந்த தமக்கு நம்பிக்கையுள்ள ராஜம் என்னும் ஒரு வேலைக்காரியை இரண் டாம் பேருக்குத் தெரியாமல் எழுப்பி அவளிடம் நடந்த விஷயங்களேச் சுருக்கமாய்ச் சொல்லி ராகவன் மனேவி யாகிய கமலம்மாளே யாருக்குங் தெரியாமல் எழுப்பும்படி சொன்னர்.

அவர் சொன்னபடியே அவள் தனக்குத் தேள்கொட்டி விட்டதென்று சொல்லி, கமலம்மாளே எழுப்பி அந்த அம் மாள் வெளியே வந்ததும் நடந்த சமாசாரங்களேச் சொல்லி ரங்கநாத்திடம் அழைத்து வந்துவிட்டாள். சங்ககாத் கமலம் மாளயும் அவளுடைய அந்தரங்க வேலைக்காரியையும் அழைத்துப் போளுர், மெதுவாகக் கதவைத் திறந்து மூவரு மாகக் கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே சென்ருர்கள். கமலம்மாள், "லக்ஷ்மி லக்ஷ்மி' என்று தட்டி எழுப்பினுள். லகடிமி கண்ணேத் திறந்து பார்த்ததும் தன்னே அழைத் துக்கொண் டிருந்த தன் தாயாரைப் பாராமலே ரங்கநாத் இருந்த திக்கைப் பார்த்து, "இவர்கள் யார்? எங்கே வந்தார் கள்? நான் யார்? நீங்கள் என் சமீபத்தில் இருப்ததாய்த் சொன்னவர்கள் துரத்தில் போய்விட்டீர்களே! அதே

என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/172&oldid=660552" இலிருந்து மீள்விக்கப்பட்டது