பக்கம்:இராஜேந்திரன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GuTರ್ಣಿಗಿ ஆராய்ச்சி 179

அப்பேர்ப்பட்ட பிள்ளே காணுேமென்ருவது இறந்தானென் குவது கேள்விப்பட்டவுடனே, கல் நெஞ்சர்களும் கஷ்டப் படும்போது, இளகிய நெஞ்சுடைய ராே ஜந்திரன் துக்க சாகரத்தில் மூழ்கக் கேட்பானேன்?

ராஜேந்திரன் மூர்ச்சையிலிருந்து தெளிந்து உட் கார்ந்தபோதிலும் துக்கத்தின் மிகுதியால் இன்னது தான் செய்ய வேண்டுமென்று யோசியாமல் செயலற்று ஒரு பக்கத்தில் உட்கார்ந்துவிட்டார். உடனே ராகவன் டெலிபோன் மூலமாகப் போலிஸ் கமிஷனருக்கு இக் கொலை யைப்பற்றித் தெரிவித்தார். அவர் உடனே வருவதாக மறுமொழி சொன்னர். அப்பால் ராகவன் அதுப்பறியும் திருவல்லிக்கேணிக் கோவிந்தனே டெலிபோன் மூலமாகக் கூப்பிட்டார். அவர்வீட்டில் இல்லையென்றும் எங்கே சென்ரு ரென்று தெரியாதென்றும், தம்மை யாராவது நேரில் தேடி வந்தாலும், டெலிபோன் மூலமாகக் கேட்டாலும் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அவசர ஜோலியின்பேரில் வெளியே சென்றிருப்பதாலும், தாம் போகும் இடங்கள் தமக்கே தெரியாததாலும் தம்மைப் பார்க்க முடியாதென்று பதில் சொல்லும்படி எஜமான் உத்தரவென்று அவர் வேலைக்காரன் சொன்னன்.

அவர் இல்லாவிட்டாலும் அவருடன் துப்பறியும் வேலை செய்யும் சீனுவையாவது ராமுடுவையாவது அனுப்பும் படி ராகவன் மறுபடியும் டெலிபோன் மூலமாகக் சொன்னர் அவர்களும் கோவிந்தனுடன் போயிருபபதாக வும், ஆகையால் அவர்களேயும் இன்னும் இாண்டு மூன்று தினங்களுக்காவது, அவர்கள் திரும்பி வரும் வரையி லாவது, பார்ப்பது சாத்தியமில்லையென்றும் வேலைக்காரன் பதில் சொன்னன். அதற்குள்ளாகப் போலீஸ் கமிஷனர் துரையவர்களும் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடுவும், போலீஸ் கான்ஸ்டேபிள்களும் மோட்டார்களில் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/178&oldid=660558" இலிருந்து மீள்விக்கப்பட்டது