பக்கம்:இராஜேந்திரன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி 18]

னர். மேலும் அந்த அடையாளம், கையைத் துடைத்ததால் ஏற்பட்ட தல்லவென்றும் தொட்டதால் ஏற்பட்டதென் றும் அதிலும் கையின் பெரு விரல் நன்ருகப் பதிந்திருந்த தால் அவ்வடையாளத்தைக் கொண்டு அந்த நபரைக் கண்டுபிடிக்கக் கூடுமென்றும் கினைத்துப் படம் பிடித்துக் கொண்டனர். .

.ே அந்த அறையில், அவர் மேஜையின்பேரில் வைத் திருந்த பூரீனிவாசனின் டைரி புஸ்தகத்தையும் எடுத்து வைத்துக்கொண்டார்கள்.

அப்பால் விசாரணை ஆரம்பித்து, வேதவல்லியம்மாள் காபிபலகாரங்கள் கொண்டுவந்து வைத்துக் கூப்பிட்டது முதல், ராஜேந்திரன் மூர்ச்சித்த வரையில் நடந்த விஷயங் களேத் தெரிந்துகொண்டு, அங்கே காவலிருந்த ராமசாமியை அழைத்து இன்ஸ்பெக்டர் விசாரித்தார்.

இன்ஸ்பெக்டர்: அடே ராமசாமி வா இப்படி; நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண் டும். நேற்று இரவு நடந்த விஷயங்களே ஒன் அம் ஒளியாமற். சொல்லு.

ராமசாமி. நேற்று இரவு நான் கடைத் தெருவுக்குப் போனேன், போனேனே? கேளுங்கோ,

இன்ஸ்பெக்டர் அடே பயலே இங்கே கடந்த சங்கதி களேச் சொல்லென்ருல், நீ கடைத்தெருவிற்குப் போனதும் கள் குடித்ததும், ஜலபாதைக்குப்போனதும் யார் கேட் டார்கள் கேட்டதற்குப் பதில் சொல்லு.

ராமசாமி ஐயா! ராத்திரி நடந்த சங்கதிகளேச் சொல் லச் சொன்னிங்க, சொன்ன அடிக்க வர்ரிங்க. எனக்கு எங்கிருந்து சொல்லணுமுண்னு தெரியல்லே, நீங்க கேளுங்க, நான் சொல்றேன்.

இன்ஸ்பெக்டர்: நேற்று எத்தனே மணி முதல் இங்கே இேருந்தாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/180&oldid=660560" இலிருந்து மீள்விக்கப்பட்டது