பக்கம்:இராஜேந்திரன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி 13;

வந்து வைத்திருக்கலா மல்லவா? நீங்கள் இங்கே வரும் போது என்ன என்ன கொண்டுவந்தீர்களென்று யாரையா பார்த்தார்கள்? பார்ப்போம் ஒருகை

இன்ஸ்பெக்டர். ரங்கநாத் என் இப்படியெல்லாம். பேசு இநீர்? இத் துணிகள் யாருடையன இங்கே எப்படிவங்தன: ரங்கநாத்: அக் கேள்விக்கும் பதில்சொல்ல வேண்டுமா? இத் துணிகள் யாருடையனவென்று உமக்குத்தான் தெரி யம், உம்மாலும் உம்முடன் வந்திருக்கும் எம கிங்கரர்க வ-ாலுந்தான் இவைகள் இங்கே கொண்டுவந்து வைக்கப்

பட்டன.

இன்ஸ்பெக்டர்: சரி, துணிகளேத்தான் நாங்கள் கொண்டுவந்து வைத்துவிட்டோம். வழி நெடுக இருக்கும் ரத்தத் துளிகளும் சோபாவின்பேரில் இருக்கும் சத்தக் கறைகளும் எப்படி வந்தன: அதற்கு என்ன :յտմrւց சொல்லுகிறீர்?

ரங்கநாத்: அதற்கென்று வேலே செய்யும் தாங்கள் இவைகளே யெல்லாம் முன் கூட்டி யோசியாமலா செய்வீர் கள். இதுவும் தங்கள் சாமர்த்தியமான வேலேதான்.

இன்ஸ்பெக்டர்: சங்கநாத் காங்கள் இப்போது வேண்டு மன்று செய்ததாகவே வைத்துக்கொள்வோம்; ரத்தம் அதற்குள் எப்படிக் காய்ந்துவிடும்?

ரங்கநாத்: நான் பாங்கிக்குச் சென்றதும் முன்கூட்டி இந்த ரத்தத் துளிகளைப் போட்டுவிட்டு அவைகள் காய்ந்த பின் இப்போது வந்து சோதிப்பதாகச் சாட்சியம் தயாரித் திருப்பீர்கள். மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்போல் இருக்கிறது.

இன்ஸ்பெக்டர்: ஐயா! நீர் ஊகிக்கிறபடி இப்படி முன் கூட்டி வேலை செய்திருந்தால், சோதனேக்குமுன் சட்டப்படி உம்மையும் மற்றவர்களேயும் கூட்டிக்கொண்டு வந்திருக்க மாட்டோமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/190&oldid=660570" இலிருந்து மீள்விக்கப்பட்டது