பக்கம்:இராஜேந்திரன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 இராஜேந்திரன்

ரங்கநாத் முதலில் ரத்தத் துளிகளே 10 மணி சுமாருக் குப் போட்டிருப்பீர்கள். அப்போது இந்தத் துணிகன் யெல்லாம் போட்டால் புது ரத்தமானதால் காயாமல் அதிக ஈரமாக இருக்குமென்றும் அப்போது தங்கள் கதை யைச் சந்தேகிப்பார்களென்றும், பின்னல் சற்றுக் காயப் போட்டு இப்போது அத் துணிகளேக் கொண்டுவந்து வைத்து மறுபடியும் பூட்டிவிட்டு, நானும் மற்றவர்களும் வந்தபின், அப்போதுதான் தாங்கள் இந்த அறைக்குள் முதல்தரம் கால் வைப்பவர்போல் நடித்து இவைகளைக் இன்டுபிடித்து என் கழுத்திற்குக் கயிறு சரியாகக் கொண்டுவ உத்தேசித்திருந்தீர்கள். தெய்வம் எனது பங்கில் இருந்ததால் நான் ஜல்தியாய் வந்து உமது வேலைத் திறத்தைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடித்துவிட்டேன் இனி உமது ஜபம் பலிக்காது. -

இன்ஸ்பெக்டர்: ரங்கநாத் இன்று நீர் இப்படிச் சாமர்த் தியமாகப் பேசிவிட்டாலும் அப்பெண்ணே எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம். அப்போது ர்ே. மறைக்கப் பார்த்தீர் என்ற குற்றம் உமதுபேரில் ஏற்படும். இப்போது சொல்லிவிட்டி ராணுல் நல்லது. உமதுபேரில் குற்றம் இல் லாமல் செய்துவிடுகிறேன். பின்னுல் என்பேரில் ஆவ லாதி சொல்லாதேயும்.

தங்கநாத்: ஐயா, என்னே என்ன சொல்லச் சொல்லு கிறீர்; சொல்லும். அப்படியே சொல்லுகிறேன், அப்போது உமக்குத் திருப்தியாக இருக்கு மல்லவா? விஜய நகரம் மகா ராணிதான் இப் பெண் உடைகளே அணிந்துகொண்டு வந்து கொன்றுவிட்டுப் போனதாகச் சொல்லச் சொல்லு இநீரா?

இன்ஸ்பெக்ட்ர்: இந்த ரவிக்கை உமது மூன்று விரல் களைச் சேர்த்துப் பிடித்தால்கூட அதில் எருதே. அப்படி இருக்க அந்தக் கதையை விட்டுவிடும்; உமக்குக் கொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/191&oldid=660571" இலிருந்து மீள்விக்கப்பட்டது