பக்கம்:இராஜேந்திரன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி #37

அவள்பேரில் இன்னும் அரை மணி நேரத்தில் வாரன்டு டன் கமிஷனர் வரப்போகிருர். அத்துடன் அவளுக்கு அநுசரணையாக இருந்து அவள் குற்றத்தை மறைக்கப் பார்த்திர்கள் என்று தங்கள் பேரிலும் வாரன்டு மனுப் போட்டுவிட்டார்கள். தங்கள் இருவரையும் இன்னும் அரை மணி நேரத்தில் பிடித்துக் கொண்டுபோய் ஜெயிலில் போட்டுவிடுவார்க்ள். அதிலிருந்து நீங்கள் இருவரும் தப்ப விரும்பினுல், தாங்கள் தாமதியாமல் நான் சொல்லுகிறபடி நடக்க வேண்டும்.

ரங்கநாத் : சொல்லுங்கள் ; அப்படியே செய்கிறேன். ஆனல் லக்ஷ்மியையும் தப்புவிப்பீர்கள் அல்லவா?

கோவிந்தன் தடை என்ன தங்களோடு லகஷ்மியும் வருவாள.

ரங்கநாத் : லகஷ்மி கூட வந்தால் தாங்கள் எங்கே செல் லச் சொன்னலும் போகத் தடை இல்ல; சொல்லுங்கள்.

கோவிந்தன் : இப்போது நான் வெளியே போய்ச் சரி யாக 7-15க்கு வருவேன். அதற்குள் ராமனைத் தண்டை யார்ப்பேட்டை போய் வரும்படி அனுப்பிவிடுங்கள். சரியாக 7.15 மணிக்கு உங்கள் அறைக்குள் ஒருவன் வருவான். அவன் வந்தவுடன் தாங்கள் கதவின் மறைவில் இருந்து அவன் சத்தம் போடாதபடியும் ஒடிப் போகாதபடியும் தொண்டையைப் பிடித்துக்கொள்ளுங்கள். நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் வருவேன். என்னேக் கண்டு பயந்து அவனப் பிடிக்காமல் இருந்துவிடாதேயுங்கள். மற்றவை பின்னல் சொல்லுகிறேன். ஒரு பெட்டியில் தங் களுக்குக் கொஞ்சம் உடுப்புகள் சேகரித்து வைத்துக்கொள் ளுங்கள்.

இப்படிச் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். அவர் போனவுடன், ராமசாமியைத் தண்டையார்ப்பேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/196&oldid=660576" இலிருந்து மீள்விக்கப்பட்டது