பக்கம்:இராஜேந்திரன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶爵 இராஜேந்திரன்

அந்த வண்டி சென்ற 10 நிமிஷங்களுக்கு அப்பால் லகழ்மியையும் ரங்ககாத்தையும் கைதிகள் ஆக்கிக்கொண்டு போவதற்காகப் போலீஸ் கமிஷனர் துரையவர்களும் இன்ஸ் பெக்டர் சப்பராயலு நாயுடு அவர்களும் ஒரு மோட்டார் வண்டியிலும்; 8 கான்ஸ்டேபில்கள் மற்ருெரு வண்டியிலு மாக வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் வண்டியை விட்டு இறங்கினதும், போலீஸ் கமிஷனர் லகஷ்மியை முதலில் கைதியாக்கலாம்” என்ருர் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடு அவர்கள், 'முதலில் சட்டம் பேசிய அந்தத் தடிப் பயல் ரங்கநாத்தைத்தான் கைதியாக்க வேண்டும்: இப் போது என்ன சட்டம் பேசுகிருன் பார்ப்போம். போலிஸ் காசர் பைத்தியக்காரர் என்று கினேத்தான்; தடிப் பயல், அந்த வேலைக்காரி ராஜம் சொன்னதை யெல்லாம் கேட் டீர்கள் அல்லவா? அவ்வளவு காரியாதிகள் செய்துவிட்டு, முழுப் பூசணிக்காயை ஒரே அமுக்காகச் சோற்றில் மறைக் கப் பார்க்கிருன். முட்டாள் பயல்'

"அடே 59! நீ இந்த வாசலில் கில்லு. அடே 4381 நீ அந்த வாசலில் நில்லு. அடே நீங்கள் 4 பேர் என்கூட வாருங்கள். அந்த முரட்டுப் பயல் ஒரு வேளே ஒடப் பார்ப். பான். ஒடினுல் முட்டியை உடைத்துவிடுங்கள்; தெரியுமா? முன்பின் பார்க்க வேண்டாம். வாருங்க ளடா இப்போது” ன்று சொல்லிவிட்டு அதிக அட்டகாசத்துடன் மெத் தைக்குச் சென்ருர்,

கதவு மூடப்பட்டிருந்தது. ரங்கநாத் ரங்கநாத்! அடே ரங்கநாத்!!! கதவைத் திறக்கிருயா மாட்டாயா!' என்ருர், சத்தம் இல்லை.

菇”恕

உள்ளே அடைபட் டிருந்த போலீஸ்காரன் எங்கே தன்னே விட்டுவிட்டு விட்டில் யாரும் இல்லையென்று போய் விடுகிமூர்களோ என்று பயந்து, தன்னுல் கூடியவரையில் கைகால்களே அடித்துச் சத்தம் உண்டாக்கினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/199&oldid=660579" இலிருந்து மீள்விக்கப்பட்டது