பக்கம்:இராஜேந்திரன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2#2 இராஜேந்திரன்

போலிஸ் இன்ஸ்பெக்டர் எந்த விதமான வண்டி என் அறும் எந்தத் திக்கில் சென்றது என்றும் விசாரித்த பின் கமிஷனர் துரையவர்களின் மோட்டார் வண்டியை வெகு வேகமாக ஒட்டிப் பின்ெதாடர்ந்து பார்த்தும் வண்டி அகப் பட வில்லே.

கமிஷனர் துரையவர்களும் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடு அவர்களும் அதிக விசனத்துடன், மூன்று கைதிக ளும் நமது கையில் இருந்து தப்பிப் போய்விட்டார்கள். இந்த சங்ககாத் அசாத்தியப் பேர்வழிபோல் இருக்கிறது. பாங்கி யில் இருந்து திருடிய ஐந்து லட்சம் ரூபாயையும் ஐம்பது லட்சம் ரூபாய் பெறுமான கோபாலபுரம் வைர நகைகளேயும், கடைசியாக நமது கைதிகளாகிய லக்ஷ்மி, லீலாவதி ஆகிய இருவர்களேயும் அழைத்துக்கொண்டு, நமது கண்ணில் மண் னேப் போட்டும், நமது பேருக்கு அபக்கியாதியைக் கொண்டு வந்து விட்டுவிட்டும் பறந்துவிட்டான். இனி அவன் அகப் படுவது ஏது அவனுக்கு அநுசரணையாக வேலை செய்ய ஒரு கூட்டத்தார் இருக்கிறர்கள்போல் இருக்கிறது. இனி ராஜேந்திரனுக்கு நாம் என்ன பதில் சொல்வது?’ என்று இவ்வாருகப் பல சிந்தனைகளுக்கு ஆளாகி மகா விசனத் துடன் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்ருர்கள்.

பிறகு, சுப்பராயலு நாயுடு மட்டும் குடக்கூலிக்கு மோட் டார் வண்டி ஒன்றை அமர்த்திக்கொண்டு அன்றைய இரவு பூராவும் மறு நாள் பகல் முழுவதும் மேற்படி மூன்று கைதி களேயும் தேடித் தேடி அலைந்து, வாடி, மனம் புண்ணுர்ை.

தம்மால் கூடியவரையில் சென்னே முற்றும் சந்து சங் தாகத் தேடிப் பார்த்தும் விசாரித்தும் அந்தப் பாழும் போலிப் போலீஸ் இன்ஸ்பெக்டரையும் தமக்கு அதிக கோபத்தை உண்டுபண்ணிய ரங்கநாத்தையும், லக்ஷ்மி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/201&oldid=660581" இலிருந்து மீள்விக்கப்பட்டது