பக்கம்:இராஜேந்திரன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கடைசி ஆராய்ச்சி 233

யையும் அவர்களே ஏற்றிக்கொண்டு போன வண்டியை யும்பத்றி எவ்வித உளவும் கிடைக்கவே இல்லை; கண்க ளுக்குத் தென்படவும் இல்லே. அதிலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடுவுக்கு ஆத்திரம் இன் னும் அதிகம் ஆயிற்று. ருக்மிணி பாங்கி முதல் சமுத்தினக் கரை வரையில் அந்த வண்டி போனதைப் பார்த்ததாகப் பலர் சொன்னர்களே தவிர, அப்பால் அந்த வண்டி என்ன ஆயிற்றென்றும் அதில் இருந்த மூன்று பேர்களும் எப்ப டிப் போனுர்களென்றும் தெரியாததால் அந்த வண்டி ஆட்களுடன் கூவம் ஆற்றில் முழுகிப் போயிற்ருர் அல் லது சமுத்திரத்தில் நேராகப் போய் இறங்கிவிட்டதா என்றுகூடச் சந்தேகப்படக் கூடிய விதமாக இருந்தது. என்ன செய்வார்; பாவம்! -

10. கோவிந்தனின் கடைசி ஆராய்ச்சி

"வீரன் கேண்மை கூரம் பாகும்’

சோறு, தண்ணி இல்லாமல் ஒர் இரவு ஒரு பகல் முழுவதும் அலேந்த அலுப்புத் தீரச் சுப்பராயலு நாயுடவர் கள் கன்ருகப் படுத்து உறங்கிவிட்டுத் திங்கட் கிழமை காலே 8 மணிக்குக் கமிஷனர் துரையவர்களிடம் வந்தார். கமிஷ னர் துரையவர்கள் புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, 'கால் வரைப்பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?’ என்ருர்,

இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடு: ஐயா ருக்மிணி பாங்கி முதல் சமுத்திரக்கரை வரையில் அவ் வண்டி போனதைப் பார்த்ததாகப் பலர் சொல்லுகிருர்கள். அப்பால் அந்த வண்டியும் அதில் இருந்த மூவரும் என்ன ஆளுர்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/202&oldid=660582" இலிருந்து மீள்விக்கப்பட்டது