பக்கம்:இராஜேந்திரன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 இராஜேந்திரன்

தெரியவில்லை. பாதாள லோகத்திற்கே சென்றுவிட்ட தாகத்தான் தோன்றுகிறது. வண்டியுடன் ஆட்களும் காணுமற் போனது ஆச்சரியமே! முனிசிபல் ஆபீசிலுள்ள கணக்கின்படி சென்னையில் உள்ள லாயங்களில் எல்லாம் பார்த்து ஆகிவிட்டது. அந்த அடையாளம் உள்ள வண் டியே எந்த லாயத்திலும் இல்லே. அந்தத் தடிப்பயல் ரங்க நாத் பேரில் இருக்கும் கோபத்தால் எப்படியாவது அவர்க ளேப் பிடித்துவிட வேண்டுமென்று நானும் இன்னும் 10 பேரும் அதே தொழிலாக இருந்து வேலே செய்தும் பயன் இல்லாமல் அலுத்துப் போனுேம். அந்த வண்டி சென்னை யில் இல்லை. சென்னேயில் இருந்து வெளியே போகும் டோல் கேட்களில் எல்லாம் கேட்டதிலும் அந்த அடையாளம் உள்ள வண்டி போகவில்லை என்று எல்லாச் சுங்கச் சாவ டிக்காரர்களும் சொல்லுகிருர்கள். இனி என்ன செய்வ தென்றே தோன்றவில்லை. தாங்கள் ஏதாவது யுக்தி சொன்னுல் அதன்படி நடக்கிறேன்.

கமிஷனர் துரை : மிஸ்டர் சுப்பராயலு! தயவு செய்து இக் கடிதத்தை வாசித்துப் பாருங்கள. இதுவரையில் கமக்கு இருட்டாக இருந்த அநேக விஷயங்கள் இப்போது வெளிச்சம் ஆகும். ரங்கநாத் நமக்கு விரோதமாக இவ்வளவு சாமர்த்தியமாக வேலை செய்ய முடியாதென்றும் நம்ம்ை விடத் தேர்ந்த கையால்தான் இக் காரியங்கள் நடத்தப்பட் டிருக்க வேண்டுமென்றும் நான் சொன்னபோது தாங்கள் அதை நம்பவில்லை. இப்போ தாவது தங்களுக்கு அர்த்தம் ஆகிறதா பாருங்கள்.

உடனே இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடவர்கள் அக் கடிதத்தை அவசரமாக வாங்கி வாசித்தார். அதில் பின் ல்ை சொல்லும் விஷயங்கள் வரையப்பட்டிருந்தன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/203&oldid=660583" இலிருந்து மீள்விக்கப்பட்டது