பக்கம்:இராஜேந்திரன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żjá இராஜேந்திரன்

கோவிந்தன். சரி, அதுவரையில் தாங்கள் சகலசெலவு களும் செய்து வந்திர்களே அவளிடம் ரூபாய்கள் வைத் துக்கொண்டு தங்களேச் செலவு செய்யச் சொன்னுளா? அல்லது உண்மையாகவே அவளிடம் பணம் இல்லையா?

ரங்கநாத். உண்மையாகவே அவளிடம் பணம் இல்லை. எப்படி யென்ருல் ரூபாய்கள் வைத்துக்கொண்டு மறை வாகப் பேச அவளுக்குத் தெரியாது. இப்போது அவளி உம் ரூபாய்கள் இருப்பதால் என்னேச் செலவு செய்ய வேண்டாமென்று சொல்லிவிட்டதோடு, நான் இதுவரை யில் செலவு செய்திருக்கும் ரூபாய்க்ளேயும் திருப்பிக் கொடுக்க வந்தாள். நான் வாங்கமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.

கோவிந்தன். தாங்கள் இதுவரையில் அவள் கிமித்தம் சுமார் எவ்வளவு ரூபாய் செலவழித் திருக்கிறீர்கள்:

ரங்கநாத் : சுமார் ஏழாயிரத்துச் சில்லறை ரூபாய்கள் இருக்கலாம்.

கோவிந்தன்: இதுவரையில் ஒரு காசுகூட இல்லாமல் இருந்தவளால் திடீரென்று எப்படி அப் பெருந்தொகை கொடுக்கச் சாத்தியமென்று யோசித்திர்களா?

ரங்கநாத் : அவளுக்கு வர வேண்டிய இடத்திலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வந்ததாகவும் ஆகையால் திருப்பிக் கொடுக்க உத்தேசித்த தாகவும் சொன்னுள்.

கோவிந்தன் : அவள் அப்படிச் சொன்னது உண் மையாக இருக்கலாம் என்று தாங்கள் நம்புகிறீர்களா?

ரங்கநாத் : ஏன் கம்பக் கூடாது? அவளேப் பார்க்கும் போதே அவள் சீமாட்டியாக இருக்க வேண்டுமென்று என் மனத்தில் பட்டது. கால வித்தியாசத்தால் ஏதோ கஷ்ட தசையில் இருப்பதாகவும் கூடிய விரைவில் தன் கஷ்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/213&oldid=660593" இலிருந்து மீள்விக்கப்பட்டது