பக்கம்:இராஜேந்திரன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 24?

அதற்குள்ளாக விக்கிரகத்தின் பின் பக்கம் இருந்த கதவைத் திறந்துகொண்டு, கிழவன் வேஷத்தோடு வந்த கோவிந்தன் விக்கிரகத்தின் பக்கவாட்டில் ஒர் உதை கொடுக்கவே விக்கிரகம் தலேகுப்புறப் பக்கவாட்டில் விழுந்துவிட்டது. விக்கிரகம் விழுந்ததுதான் தாமதம். சத்த மும் கின்றுவிட்டது. ஈட்டிகளும் உள்ளே போய்விட்டன.

அதே நிமிஷத்தில் இன்னொரு பக்கத்து அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்த போலிஸ் கமிஷனர் துரை யும் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடுவும் பூரீனிவாசனப் பிடித்து விலங்குகள் மாட்டிவிட்டார்கள். அதே விநாடி யில் இன்னேர் அறையில் இருந்து ராஜேந்திரனும் ராகவ னும் ஓடி வந்தார்கள். லகஷ்மி வந்த அறையில் இருந்தே ரங்கநாத்தும் லகஷ்மியின் பின்னலேயே ஓடிவந்தார். கோவிந் தன் மாத்திரம் அவ் விக்கிரகத்தை உதைத்துத் தள்ளியிரா விட்டால் இவ்வளவு பேர் வந்தும் தடுக்கும் முன் லக்ஷ்மியும் வேதவல்லியம்மாளும் அக் காளிகா தேவிக்குப் பலியாகி இருப்பார்கள் என்பதில் கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை.

கோவிந்தன் வைரங்கள் இருந்த பெட்டியையும் மேஜை யின்மேல் இருந்த நோட்டுக்களின் பெட்டியையும் எடுத்துப் போலிஸ் கமிஷனர் துரையவர்களிடம் கொடுத்து, பத்திர மாக வைத்துக்கொள்ளச் சொன்னர். காம் எழுதுவதற்கு இவ்வளவு நேரம் ஆயிற்றே ஒழிய இவ் விஷயங்கள் எல் லாம் கண் மூடி விழிப்பதற்குள், உயர்தரமான பார்ஸி கம் பெனியின் நாடகத்தில் காண்பிக்கப்படுகிற அற்புதக் காட்சிகளில் ஒன்றைப்போல், ஒரு விநாடியில் நடந்தேறி விட்டன.

அப்போது வேதவல்லி யம்மாள், 'அட, கொலே காரப் பாவி உன் அண்ணுவையும் அப்பாவையும் கொன் றது போதாது என்று உன் தாயாகிய என்னேயும், உன்னேக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதித்திருந்த லக்ஷ்மியை

இ-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/240&oldid=660620" இலிருந்து மீள்விக்கப்பட்டது