பக்கம்:இராஜேந்திரன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2轶 இராஜேந்திரன்

பயணுகப் பல கஷ்டங்களே அநுபவிக்க நேரிட்டபோதி லும், துஷ்ட விக்கிரக சிஷட பரிபாலகரான பகவான், இப் போது என்ன விதமான ஏற்பாட்டினே-முடிவை அவர்களுக் குச் செய்திருக்கிருர் என்று பார்ப்போம்.

12. கோவிந்தன் விவரித்துச் சொல்லல்

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'

கோவிந்தனுடைய வீட்டிலே, பந்தோபஸ்தான அறை ஒன்றில் ரீனிவாசன், கை விலங்கு, கால் விலங்குகளுடன் அடைக்கப்பட்டான். வெளிக்குப் பலமான பூட்டு ஒன்றும் போடப்பட்டது. இவ்விதமே கோபாலாச்சாரியார் கொல்லப் பட்டும், வேதவல்லி அழுதுகொண்டும் இருந்த அறையை யும் பூட்டி அவ்விரு அறைகளுக்கும் போலிஸாரைக் காவல் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வளவையும் கோவிந்தன் நிறைவேற்றிவிட்டு, வைரங்கள் இருந்த பெட் டியையும் கோட்டுகள் அடங்கிய பெட்டியையும் கமிஷனரிடம் ஒப்பித்துவிட்டு, எல்லோரையும் ஹாலுக்கு அழைத்து வந்து சோபாக்களில் வீற்றிருக்கும்படி செய்தார். இன்ஸ் பெக்டர் சுப்பராயலு நாயுடு தம் அருகே ரங்கநாத் அமர்க் ததைக் கடுர திருஷ்டியுடனும் கோபத்தோடும் பார்த்து விட்டுத் தகடினமே எழுந்து வேறு சோபாவில் போய் உட்கார்ந்தார். -

இன்ஸ்பெக்டரவர்களது பா பரப்பைக் கமிஷனர் துரை யவர்கள் பார்த்துச் சிரித்துக்கொண்டு,"என்ன சுப்பராய ജ് இன்னும் சங்ககாத்பேரில் உனக்கு இருக்கும் கோபம் தணியவில்லேபோல் இருக்கிறது” என்ருர், ... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/243&oldid=660623" இலிருந்து மீள்விக்கப்பட்டது