பக்கம்:இராஜேந்திரன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 245

உடனே கோவிந்தன், "ஐயா! அவர்களுக்குக் கோபம் இருப்பது கியாயந்தானே! என்பேரில்கூடக் கோபம் தான் இருக்கும். தாங்கள் அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாம். கோபம் எல்லாம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்” என்ருர் கமிஷனர் துரையவர்கள் கோவிந்தனைப் பார்த்து, எப்படி இவைகளேக் கண்டுபிடித்தீர்கள்? சொல்லுங்கள்” என்ருர். -

கோவிந்தன் : ம-ா-ா.பூரீ ராஜேந்திரன் அவர்கள் இரும்புப் பெட்டிக்கு இரண்டு சாவிகள் இருக்கிறதென்று சொன்னவுடனே, இப்பேர்ப்பட்ட பெட்டிகளுக்கு இரண்டு வெவ்வேறு சாவிகளுடன், மாஸ்டர் கி' என்று சொல்லும் இரண்டு பூட்டுகளேயும் திறக்கும் ஒரு சாவி இருப்பதும் வழக்கம் ஆதலால், அப்பேர்ப்பட்ட சாவி இந்தப் பெட்டிக்கு உண்டா என்று கேட்டதில் ராஜேந்திரன் உண்டு என்ருர். அக்தச் சாவியைத் தம் கைப் பெட்டியில் பந்தோபஸ்தாக வைத்திருப்பதாகவும் அந்தப் பெட்டியின் சாவி எப்போ தும் தம் பூணுரலில்தான் இருப்பது வழக்கம் என்றும் தெரிவித்தார். அப் பெட்டியை வேலைக்காரனே விட்டு எடுத்து வரச் செய்து அவரிடம் இருந்து சாவியை வாங்கி, நானே திறந்து, பூதக் கண்ணுடியின் உதவியால் பார்த்த போது அப் பெட்டியில் உள்ள மற்றக் காகிதங்கள், சாமான் கள் முதலியவற்றின்பேரில் எல்லாம் துரசு படிந்து இருப்ப தையும், அச் சாவியைப் போட்டு முத்திரை வைத்திருக்கும் பையின்மேல் மாத்திரம் துரசு இல்லாமல் இருப்பதையும் கண்டு, அந்தப் பையைப் பார்த்ததில் அந்த முத்திரையை வெகு சாதுரியமாக எடுத்துவிட்டு முத்திரை கலையாமல் மறுபடியும் ஒட்டப்பட் டிருப்பது தெரிந்தது.

அதில் இருந்து இரண்டு விஷயங்களே அறிந்தேன். அதாவது இரும்புப் பெட்டியில் இருக்கும் ரூபாய்கள்ேயும் வைரங்களேயும் எடுப்பதற்கு இந்தச் சாவிதான் உபயேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/244&oldid=660624" இலிருந்து மீள்விக்கப்பட்டது