பக்கம்:இராஜேந்திரன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 இராஜேந்திரன்

சென்னேயில் உள்ள, பழைய பூட்டுகளுக்குச் காவி போடுவோரை விசாரித்ததில், பூரீனிவாசன் ராஜேந்திரன் படுக்கை அறையின் பூட்டுச் சாவியும் படுக்கை அறையில் உள்ள் ஒரு கைப் பெட்டியின் பூட்டுச் சாவியும் காணுமற் போய்விட்டதாகத் தன்னே அழைத்துப் போய்ப் புதுக் சாவிகள் போட்டுக் கொடுக்கச் சொன்னதாகவும், தான் போட்டுக் கொடுத்ததாகவும் அதற்காக யூரீனிவாசன் ரூபாய் 10 கொடுத்ததாகவும் தெரிய வந்தது. ஆகவே கைப் பெட்டியைத் திறந்து அதிலுள்ள இரும்புப் பெட்டி யின் மாஸ்டர் கி" யை எடுத்தவன் பூநீனிவாசனுகத்தான் இருக்க வேண்டுமென்றும் ஊகித்தேன்.

அப்பால் அன்று பூரீனிவாசன் வெளியிலேயே போக வில்லையென்றும், ஆல்ை எவரோ ஒருவர் திருட்டுப்போன அன்று இரவு 9-மணிக்கு வந்து, அவருடன் ஏதோ பேசி விட்டுப் போனதாகவும் மறுபடியும் சுமார் 10-மணிக்குத் திரும்பி வந்து, பூரீனிவாசனிடம் ஏதோ கொடுத்துவிட்டுப் போனதாகவும் தெரிந்தது.

வந்தவர் 3 தடவையும் வீட்டிற்குள் செல்லவில்லை.ஆத லாலும், திரும்பிப் போகையில் பெட்டியாவது வேறு சாமான்களாவது எடுத்துப் போகவில்லை ஆ தலாலும், வைரங்களேயும் கோட்டுகளேயும் பூரீனிவாசன் திருடிக் கொடுத்து அனுப்ப வில்லை என்றும், மறு நாள் சாயங்காலம் வரையில் பூரீனிவாசன் வெளியிலேயே போகவில்லை என்றும், விட்டில் இருந்து எந்தச் சாமானும் வெளியே போகவில்லை என்றும் பாராக்காரன் திட்டமாகச் சொன்னதாலும், திருட்டுப்போன மறு நாள் சாயங்காலம் ரங்கநாத் லீலாவதி யிடம் சென்றபோது, தன்னிடம் ரூபாய் ஐம்பதாயிரம் இருப் பதாக அவள் சொன்னதாலும், பூரீனிவாசனத் தவிர வேறு எவரோதான் திருடி அவளிடம் ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்திருக்க வேண்டுமென்றும் ஊகித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/251&oldid=660631" இலிருந்து மீள்விக்கப்பட்டது