பக்கம்:இராஜேந்திரன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இராஜேந்திரன்

இப்போது என் மனத்தில் என்ன கினேக்கிறேனென்று உம்மால் சொல்ல முடியுமா?

கோபண்ணு: ஐயா! நான் என்ன ஈசுவரனு? உமது மனத்தில் கினேத்திருப்பதைச் சொல்ல: அது முடியாது, ஆனல் ஏதாவது ஒர் எண்ணச் சொன்னல் அதைக் கொண்டு கணித்து லக்கினம் கண்டுபிடித்து, லக்கினத்தை யும் மற்றக் கிரக அமைப்பையும் கவனித்து இன்ன காரிய மாக இருக்குமென்றும், முடியும் முடியாதென்றும் சொல்லக் கூடும்.

ராஜா. அவ்வளவாவது சரிவரச் சொல்லக்கூடு மென்று நான் கினேக்கவில்லை.

கோபண்ணு: தாங்கள் பரீட்சிக்குமுன் அப்படித் திர் மானித்து விடுவது சரியல்ல. ஏதோ சொல்லுங்கள், ரங்க நாதர் விட்டவழி விடட்டும்.

ராஜா என்ன சொல்லச் சொல்லுகிறீர்? இன்னது கினேத்திருக்கிறேன், முடியுமா முடியாதா என்று கேட்கச் சொல்லுகிறீரா? இரண்டில் ஒன்று சொல்வதற்கு ஆருட மாவது ஜோஸ்யமாவது பார்க்கவேண்டிய அவசிய ඇති ශ්ඨිඨාශීu (1

கோபண்ணு: கான் உங்களைச் சமாசாரம் சொல்லச் சொல்லவில்லை; ஏதாவது ஒர் எண் 120-க்குக் குறைவாய்ச் சொல்லுங்கள், பார்ப்போம்.

ராஜா: எண்பத்தாறு.

கோபண்ணு: 12 ராசிக்கு 130-ஐ வகுத்தால் ராசி ஒன் ஆறுக்கு 10 லக்கம் வருகிறது.ராசிக்கு 10வீதம் 86-ஐ 10-ஆல் வகுத்தால் விடை 8 ஆகிறது. ஆகவே 8வது ராசி முடிந்து 9வது சாசி, அதாவது தனுர் லக்னம்.லக்கினத்திற்கு 7-வது இடத்திலிருக்கிற சந்திரனும் புதனும் லக்கினத்தைப் பார்ப்பதால் கட்டாயமாய் ஸ்திரீ சங்கையென்று சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/27&oldid=660407" இலிருந்து மீள்விக்கப்பட்டது