பக்கம்:இராஜேந்திரன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம் 37

ராகவன்: ஸ்வாமி, எனது நண்பரோ பெரிய குடும்பத் தைச் சேர்ந்தவர். இதுவரையில் எவ்விதமான கெட்ட நடத்தையிலும் பிரவேசியாதவர். அப்படியிருக்க ஏதோ கால வித்தியாசத்தால் அவருக்கு இம்மாதிரி யோசனை பட்டுவிட்டது. எவ்வளவு சகாயமாய்க் காரிய சாதனம் செய்யக்கூடுமோ அவ்வளவு சுலபமாய்த் தீவிரத்தில் அவர் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வித்து எங்களே நாளேக்காவது ஊருக்கு அனுப்பப் பிரயத்தனம் செய்யுங்கள்.

கோபண்ணு: இதெல்லாம் இவ்வளவு அவசரத்தில் ஆகிற காரியமா? ஆர அமர யோசித்துத்தான் செய்ய வேண்டும்.

ராஜா: ஸ்வாமி, எனக்கு ஒரு கிமிஷம் போவது ஒரு யுகமாக இருக்கிறது. மேலும் நாங்கள் இரண்டொரு நாட் களுக்குமேல் இங்கே தங்க முடியாது. பொருட் செலவைப் பற்றித் தாங்கள் சிந்தனே செய்ய வேண்டாம். 100-150 ஒரு பொருட்டல்ல.

கோபண்ணு: அந்தப் பெண்ணின் சிற்றன்னே பொரு ளாசை பிடித்தவள். அதனால்தான் முடிக்கலாம் என்று ஒரு நம்பிக்கை. அது மட்டுமேயல்ல. அந்தப் பெண் பெரிய மனுஷியாகிச் சில வருஷங்கள் ஆகிவிட்டதாம். புருஷர் விட்டார் ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் சாந்திக்கல்யா ணம் செய்ய முடியும் என்று கண்டிப்பாய்த் தெரிவித்து விட்டதாகவும் சமாசாரம். பெண்ணின் தகப்பணுருக்கோ அன்ருடப் புசிப்புக்கே பெரிய திண்டாட்டம். உங்கள் அதிர்ஷ்ட வசத்துக்குத் தக்கபடி இடமும் பண நெருக்கடி யைத் தீர்த்துக்கொள்ள எவ்விதத்திலும் எதிர் பார்க்கிற இடமாய்க் குறுக்கிட்டிருக்கிறது. இப்படியெல்லாம் இருப்ப தால்தான் அந்தப் பெண்ணின் சிற்றன்னேயைக் கொண்டு பேசிச் சரி செய்யலாமென்று கினேக்கிறேன். எப்படி முடியுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/36&oldid=660416" இலிருந்து மீள்விக்கப்பட்டது