பக்கம்:இராஜேந்திரன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணேயின் அலங்கோலம் 39

சரியாய்க் கால்மணி நேரம் வரையில் சொன்னதன் பேரில் தான் கொடுக்கும் காகிதத்தைத் தபாலில் போட்டு விடுவதே தனக்குச் செய்யக்கூடிய பேருபகாரமென்று ருக் திணி சொல்லவே கோபண்ணு தம் வேலையாய் நேராகத் தபாலாபீசுக்குத்தான் போகப் போவதாகவும் ஆகையால் காகிதத்தை உடனே போட்டு விடுவதாயும் சொல்லி அவள் கொடுத்த காகிதத்தை வாங்கிப் பத்திரமாய் வைத்துக் கொண்டு ராஜூ இருக்கும் ஜாகைக்குப் போய்ப் பின் வரு மாறு சொன்னர். -

கோபண்ணு: அப்பெண் கோவிலுக்கு வரமாட்டே னென்று தன் சிற்றன்னேயிடம் சொன்னதன்பேரில் சிற் றன்னே கோபிக்க அப்பெண் நாளே ஊருக்குப் போவதாகத் தீர்மானித்து அவள் தகப்பருைக்குக் கடிதம் எழுதிவிட்டு அழுதுகொண் டிருந்தாள். சுமார் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் அவள் சிற்றன்னே வழிக்கு வருவாள்போல் இருக்கி றது. ஆனல் கனகாபிஷேகம் செய்தாலும் அந்தப் பெண் ஒத்துக்கொள்ள மாட்டாள்.

ராஜா. ஆனல் காரியம் முடியாதோ' கோபண்ணு: தங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் ஒருவாறு முடிக்கலாம்.

ராஜா: என்ன? ஒருவாறு முடிக்கலாமென்று சொல் வதன் தாத்பரியமென்னர் விவரமாய்ச் சொல்லுங்கள்.

கோபண்ணு: அந்தப் பெண் சுயபுத்தியோடு இருக்கும் போது ஒருகாலும் சம்மதியாள். அவளுக்கு மருந்து கொடுத்து மயக்கம் உண்டாகும்படி செய்து அப்போது வேண்டுமானல் தங்கள் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். 2000-ரூபாயும் கொட்டிக் கொடுத்து அப் படிச் செய்வதுதான் எனக்குக் கொஞ்சமாவது பிடிக்க வில்லே. கழுதையை விட்டுத்தளளுங்கள்.அவளேவிடச் சுக்தரி களேச் சுலபமாய் 100 அல்லது 300-ல் பேசி முடிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/38&oldid=660418" இலிருந்து மீள்விக்கப்பட்டது