பக்கம்:இராஜேந்திரன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதகவிணையின் அலங்கோலம் 45

அவளது மிருது மயமான கையின் மெல்லிய பலத்திற்கு அது உடைபடவேயில்லை. செய்வதற்கு ஏதும் தோன்ருது ஸ்தம்பித்து நின்ருள். ஒரு திரும்பு திரும்பினுள். ராஜு வின் உருவம் தென்பட்டது. அவனேக் காண அவளுக்குச் சகிக்கவில்லே. நெஞ்சம் பகீரென்றது, கொதித்தது! பற்றி எரிந்தது! கோபத் தணல் வீசிற்று தன் அழிவிற்குஆத்ம நாசத்திற்கு-மானபங்கத்திற்கு-இவனன்ருே கார னம் எனத் துடித்தாள்.-பதைத்தாள்-உள்ளங் கலங்கி ள்ை.-உடனே அவன் பக்கமாகத் திரும்பி, -

அட பாதகா சண்டாளா! உனக்குத் தலைகுனிவும் ஒரு கேடா என் கற்பை அழித்த துரோகி சேனே! இமைப்பொழுதில் உன் உயிரையும் முடித்து என் ஆவியை யும் போக்கிக்கொள்வேனே! ஆயுதம் ஏதுமில்லேயே ஐயோ தெய்வமே கிராதகா! உன்னுல் எத்தனே குல ஸ்திரீகள் தமது கற்புச் சீலம் பாழ்பட்டனரோ அடே காமுகனே! வெறியேறிய நாயே! இந்த அக்கிரமம் தெய்வத்துக்கு அடுக் குமா! ஏனடா இந்த நாசகால புத்தி! பெண் பாவம் பொல் லாது. என் கண்ணிர் விணுகாது. உன்னேயும் உனது வமிசத்தையும் அது சுற்ருமல் விடாது. அட கெடுவாய்! ஐயோ! அம்மா! இக்கோலங் காணவோ உங்கள் வயிற்றில் பெண்ணுய்ப் பிறந்தேன்! ஐயோ! ஐயோ! என்னுல் தாங்க முடிய வில்லையே” என்று கூறிக்கொண்டு திடீரென்று கீழே விழுந்தாள்; மூர்ச்சை போனுள்.

பார்த்தான் ராஜு; திடுக்கிட்டான். ஆயிரத்தெட்டு அம்புகள் ஏககாலத்தில் ஊடுருவிப் பாய்ந்ததுபோல் மிக்க மன வேதனையை அடைந்தான். அவன் இரு கண்களி. லிருந்தும் அருவிபோல் ஜல்ம் வந்துகொண் டிருந்தது. செய்வது என்னவென்று தெரியாது திகைத்து கின்றன். சிறிது ஜலத்தை ருக்மிணியின் முகத்தில் தெளித்துக் கண்களேத் துடைத்துச் சற்று விசிறின்ை. ருக்மிணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/44&oldid=660424" இலிருந்து மீள்விக்கப்பட்டது