பக்கம்:இராஜேந்திரன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோல்ம் 47.

னேயே இருந்து உமது காலத்தை மகிழ்ச்சியிற் கழிக்கவா இந்த மயக்குகளைக் காண்பிக்கிறீர்கள். அதுதான் உமது உத்தேசமோ? தெரிகிறது, தெரிகிறது.

ராஜா: பாவாய்! பெண்மணி! நான் காலம் முழுமை யும் பரஸ்திரீ கமனமின்றி ஏகபத்தினி விரதனுகவே இருந்து தீரச் சங்கல்பம் செய்துகொண் டிருக்கிறேன். இல்லை; இல்லை, இருந்தேன். என் பிரதிக்ஞையாகிய ஆகா யத்தில் விபரீதத்தால் கார்மேகங்கள் தோன்றி இவ்வாறு நான் கெட்டழிந்த பதரானேன். என் கடைசி காலம் வரைக்கும் இத்தவறுதல் ஒன்றே போதுமானது. அதுவே என் ஜீவகாலத்தைத் தீவிரத்தில் மாய்த்துவிடும். ே எழுந்திருப்பதற்கு முன்னதாகவே நான் தற்கொலைக்கும் துணிந்தேன். ஆனல் உன்னேக் கற்ப்ழித்த பாவத்துடன் நீயும் அந்தத் துக்கத்தால் உயிர் விடுவாயாயின்.அப்பெண் பாவமும் என்னேயே வந்து அடையுமாதலின் அதற்கே பின்னடைந்து அதிலிருந்தும் உன்னேத் தடுக்கவே உயிர் கொண்டு வெற்றுடம்பாய் நிற்கிறேன். இனி நான் வேறு; நீ வேறுதான். இனி இந்த காணிய உடலுடன் என்றுமே உன் எதிர்ப்படமாட்டேன். என் சவம்கூட உன் கண்முன் படாது. இது நிச்சயம். -

ருக்மிணி. இப்போது காட்டும்; இந்த இரக்கத்தை என் இனக் கற்பழிக்குமுன் காண்பித்திருக்கலாகாதா! நீர் பேசுவ தெல்லாம் உண்மையோ அல்லது என்னே வஞ்சிக்கும் கற் கண்டு வசனத்துண்டுகளோ என்னேப் பாழ்படுத்திய உமது வார்த்தையிலும் நான் கம்பிக்கை வைப்பது கூடுமா! இந்த உலகத்தில் பெண்கள் அஞ்சுவதெல்லாம் உம்மைப் போலொத்த புருஷர்களே நினைத்தே. அவர்களால் எங்கே தம் கற்பு அழிய நேரிடுமோ எனக் கலங்கியேதான்; அதை நீர் மெய்ப்பித்து விட்டீர்.

ராஜா: 'எந்த இடத்தில் ஒரு பொருள் கிடைக்கவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/46&oldid=660426" இலிருந்து மீள்விக்கப்பட்டது