பக்கம்:இராஜேந்திரன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இராஜேந்திரன்

ரென்றும் பரகாரி ஸ்கோதரரென்றும், சகல நற்குணங்களுக் கும் உறைவிடமென்றும், உம்மைப்போலவே எனது பர்த்த வும் இருக்க வேண்டுமென்றும் கோரிக்கொண்டேன். அவ் விதம் உம்மை உயர்வாக நான் நினைத்ததற்கு நீர் இப்படிச் செய்துவிட்டீர். நான் உமது மனேவியாகவே உண்மையில் இருந்திருந்து, இன்னொரு அங்கிய புருஷன் என்னே நீர் செய்தவாருக மானபங்கப் படுத்தியிருந்தால் அப்பொழுது உமது மனம் எப்படியிருந்திருக்கும்:

ராஜு: உன் கேள்வி என் மனத்தைப் பிளக்கிறது. ஆம், மிக்க அவதியடைந்திருப்பேன். சாகவும் துணிந்திரும் பேன். அந்த கிலேயில் உனது பர்த்தா இருந்து இச் செய்தியை அறிவாரானல் எத்தனே சஞ்சலம் மேற்கொள் வாரோ மகாபாதகளுகிய எனக்கு அதை நினைக்கவே நெஞ்சு திடுக்கிடுகின்றது.

ருக்மிணி. இந்த விஷயத்தை அவர் அறிந்துகொள் ளும்படி நானே கூறிவிடுவேன். எனது சரீர்ம் கெட்டு விட்டதேயன்றி என் பரிசுத்தமான ஆத்மா கெடவில்லை. இந்த நிமிஷத்திலும் அது நிர்மலமாகவே இருக்கின்றது. எனது பர்த்தாவை நான் சந்திக்கும் காலத்தில் நீர் என்னைக் கெடுத்து விட்ட சகல சங்கதிகளும் எதுவும் மறைக்காமல் கூறிவிடுவேன். அதன்மேல் அவர் என்ன ஏற்றுக்கொள்ள மனது வைத்து இணங்குவாராகில் நான் ஏதோ ஜீவித்திருக்க முடியும். அவரது அகமோ முகமோ கொஞ்சம் கோணிற்ருகில், அவர் என்னே அங்கீகரிக்க மாட்டேனென்று வாய் மொழியால் கூற வேண்டு வதில்லை. அவர் முகக் குறிப்பாலேயே அக்குறிப்பைத் தெரிந்துகொண்டு தகடினமே எவருக்கும் தெரியாமல் நான் பிராணத்தியாகம் செய்துகொள்வேன். பகவானறிய திரிகரண சுத்தியாக இது சத்தியம்.

ராஜா: உன் உத்தம குணத்துக்கு வியப்பும் பூரிப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/49&oldid=660429" இலிருந்து மீள்விக்கப்பட்டது