பக்கம்:இராஜேந்திரன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணேயின் அல்ங்கோலம் 53

கூறிஞனெனுனிம் ராஜூவின் துயரம் அதிகரித்தே கின் றது. அன்று மாலேயே பிரயாணமாகிச் சென்னே சேர்ந்தனர். ராஜா தான் பட்ட ஆயாசத்தாலும் அழுகையாலும் கண்கள் சிவந்து தேகம் மெலிந்து தோன்றின்ை. மறுதினமே ஜூரத்தால் பாயும் படுக்கையும் ஆன்ை.

இனிமேல் நடப்பவைகளேக் கவனிப்போம். சாந்திக்கல் யாணத்துக்காக இவ்வாறு சேகரித்த 2000 ரூபாயில் 1200 ரூபாய்தான் ரங்கம்மாள் கைக்கு வந்து சேர்ந்தது. மற்ற 800 ரூபாயையும் கோபண்ணு தம் வயிற்றில் கொட்டிக் கொண்டார். கோபண்ணுவை யொத்த உத்தமர்கள் ரீரங் கத்தில் பலர் உளர். தம்மிடம் தரப்பெற்ற 1200 ரூபாயில் ரங்கம்மாள் ஒரு காசும் தொடவேயில்லை. இருந்திருந்து தனது தமக்கைக்கு ஒரே ஒரு பெண். அப்பெண்ணுக்காக ஆஸ்தியும் தோற்று அனைத்தையும் தோற்று, த்ன் அக்காள் தரித்திர ஸ்திதிக்கு வந்துவிட்டாள். சாந்திக்காக ஆயிரம் ரூபாய் கிடைக்கா விட்டால் தன் அக்காள் குடும் பத்தின் மானமே போய்விடும் என்றுதான் இவ்வளவு பாடும் பட்டாளேயன்றி, மற்றப்படி அவளும் ஓர் உத்தமி தான். ஒரு புருஷனுக்கு மனேவிதான்; ஒரு குடும்பத்தின் தலைவிதான். என்ன செய்யலாம். வரதகதினப் பிசாசின் தூண்டுதல் அப்படிப்பட்டதாக இருக்கிறது. ஓர் உத்தி யோகம் காலியானல் ஆயிரம் மனுக்கள் வந்து குவிகிற இந்தக் கஷ்டமும் சோதனையுமான காலத்தில் ஒரு காசு தேடுவதே குதிரைக்கொம்பாயிருக்கிறது. ஆயிரம் இரண் டாயிரம் ரூபாய் என்று வரதrணேயும், அதன்மேல் ருது சாந்தியின்போது வேறு பணமும் கொட்டிக் கொடுப்ப தென்ருல் யாரால்தான் மாரடிக்க-சமாளிக்க முடியும்? இந்த அகியாயம், வயிற்றெரிச்சல் எப்போது தொலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/52&oldid=660432" இலிருந்து மீள்விக்கப்பட்டது